துளியும் மேக்கப் இல்லாமல்... சாதாரண புடவையில் த்ரிஷா! வேற லெவல் அழகில் வெளியான ரீசென்ட் போட்டோஸ்!
நடிகை த்ரிஷாவின் ரீசென்ட் போட்டோஸ் தற்போது வெளியாகி, ரசிகர்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்பட்டு வருகிறது.
39 வயதிலும் குறையாத அழகுடன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருப்பவர் நடிகர் த்ரிஷ. சுமார் 15 வருடங்களுக்கு மேலாக ஹீரோயினாக மட்டுமே நடித்து வருகிறார் என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. சமீப காலமாக தொடர்ந்து ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே அதிகம் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
ஆனால் இப்படி அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் எல்லாம் அட்டை பிளாப் ஆனாலும், தொடர்ந்து வெயிட்டான கதாபாத்திரத்திற்காக காத்திருந்த வேளையில் தான், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவையாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் செய்திகள்: ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட் போட்ட வெள்ளை தாமரையாய்... ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் கிளாமர் காட்டும் நிதி அகர்வால்!
வந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்ட, த்ரிஷா... தற்போது செப்டம்பர் மாதம் ரிலீசாக உள்ள 'பொன்னியின் செல்வன்' பாகத்திற்காக காத்திருக்கிறார். இப்படம் வெளியான பின்னர் இந்த படத்தில் நடித்த பிரபலங்கள் அனைவருடைய கதாபாத்திரமும்... அனைவரது மனதிலும் மாஸ்டர் பீஸாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்நிலையில் த்ரிஷாவின் மிகவும் எலகண்டாக... துளியும் மேக்அப் இன்றி, காட்டன் சேலையில்... இருக்கும் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் செய்திகள்: பிரபல நடிகர் மேடையிலேயே மயங்கி விழுந்து மரணம்..! திரையுலகினர் அதிர்ச்சி!