பொதுவெளியில் செக்ஸ்... விஜய் தேவரகொண்டாவின் பதிலால் ஷாக்கான ரசிகர்கள்!
சமீபத்திய காஃபி வித் கரண் நிகழ்ச்சியில், அனன்யா பாண்டே, மற்றும் விஜய் தேவரகொண்டா கலந்து கொண்டபோது, பொதுவெளியில் செக்ஸ் வைத்துக்கொண்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் விஜய் தேவரகொண்டா... இது ரசிகர்களை செம்ம ஷாக் ஆகியுள்ளது.
கரண் ஜோகர் தொகுத்து வழங்கி வரும் காஃபி வித் கரண் கரண் நிகழ்ச்சியில், சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாத கேள்விகளை கேட்டு ஒவ்வொரு வாரமும், பிரபலங்களை பற்றி அதிகம் பேச வைத்து விடுகிறார் கரண். அந்த வகையில் தற்போது லிகர் படத்தின் ஹீரோ விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே பேசியுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே விஜய் தேவரைக்கொண்ட நடிகை ராஷ்மிக்கா மந்தனாவுடன் டேட் செய்து வருகைதாக மறைமுகமாக கூறி, கொளுத்தி போட்ட தீ இன்னும் அனைவதற்குள்... விஜய் தேவரகொண்டாவே இப்போது வாயை விட்டு சிக்கியுள்ளார்.
மேலும் செய்திகள்: அப்பாவின் பிறந்தநாளுக்கு... சினேகா கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்! மனம் நெகிழ்ந்த தந்தை!
அதாவது தொகுப்பாளர் கரண் ஜோகர்... விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டேவிடம் பொது வெளியில் செக்ஸ் வைத்து கொண்டது உண்டா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு விஜய் தேவரகொண்டா... சற்று தயங்கியபடியே, சிறிய படகு மற்றும் காரின் பின் இருக்கையில் செக்ஸ் வைத்து கொண்டுள்ளதாக ஓப்பனாக பேசியுள்ளார்.
மேலும் த்ரீசம் உறவு கொண்டதுண்டா என கேட்டதற்கு இல்லை என்றும், ஆனால் புதிதாக ட்ரை பண்ணி பார்த்தால் என்ன? என்று கேள்வி எழுப்பி ஷாக் கொடுத்துள்ளார்.
இதே கேள்வியை அனன்யா பாண்டேவிடம் கேட்ட போது... தான் உறவே கொண்டது இல்லை என கூறியுள்ளார். இவருடைய இந்த பதிலையும் கலாய்த்து தள்ளினார் கரண் ஜோகர் என்பது குறிப்பிடத்தக்கது.