- Home
- Cinema
- மெட் காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த வைர நெக்லஸ் இத்தனை கோடியா.,! விஜய்யின் சம்பளத்தைவிட டபுள் மடங்காம்
மெட் காலாவில் பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த வைர நெக்லஸ் இத்தனை கோடியா.,! விஜய்யின் சம்பளத்தைவிட டபுள் மடங்காம்
நியூயார்க்கில் நடைபெற்ற மெட் காலா பேஷன் ஷோவில் கலந்துகொண்ட நடிகை பிரியங்கா சோப்ரா அணிந்திருந்த நெக்லஸின் விலை விவரம் வெளியாகி உள்ளது.

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை பிரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் பிசியான நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர் ஹாலிவுட்டில் கலக்கி வந்தாலும், இவரை முதன்முதலில் ஹீரோயினாக்கி அழகு பார்த்தது தமிழ் சினிமா தான். நடிகர் விஜய்யின் தமிழன் படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார் பிரியங்கா.
நடிகை பிரியங்கா சோப்ரா, கடந்த 2018-ம் ஆண்டு பிரபல பாப் பாடகரான நிக் ஜோனாஸை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நிக் ஜோனாஸ் தன்னைவிட வயதில் சிறியவராக இருந்தாலும் காதலுக்கு வயது பாகுபாடு இல்லை என்பதை காட்டும் விதமாக இந்த ஜோடி திருமணம் செய்துகொண்டது.
பிரியங்கா - நிக் ஜோனாஸ் தம்பதிக்கு கடந்தாண்டு பெண் குழந்தை பிறந்தது. இந்தக் குழந்தையை வாடகைத் தாய் மூலம் பெற்றுக்கொண்டது இந்த ஜோடி. அந்தக் குழந்தைக்கு தற்போது ஒரு வயது ஆகிறது. சமீபத்தில் தான் பிரியங்கா சோப்ரா தனது மகளின் முதல் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடினார்.
இதையும் படியுங்கள்... டூ பீஸ் உடையில்.. சன்னி லியோனுக்கே டஃப் கொடுக்கும் காயத்ரி ஷங்கர்! குடும்ப குத்துவிளக்கின் கவர்ச்சி கும்மாளம்!
நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு மாடலிங் துறையின் மீதும் ஆர்வம் அதிகம். அதனால் அடிக்கடி பேஷன் ஷோவிலும் கலந்துகொள்வார். அந்த வகையில், உலக புகழ்பெற்ற மெட் காலா பேஷன் ஷோ அண்மையில் நியூயார்க்கில் நடைபெற்றது. இதில் நடிகை பிரியங்கா சோப்ரா தன் காதல் கணவருடன் வந்து கலந்துகொண்டார்.
ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த மெட் காலா நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா சோப்ரா கலந்துகொள்வது இது மூன்றாவது முறையாகும். இந்த முறை அவர் தனது கணவர் நிக் ஜோனாஸ் உடன் ஜோடியாக கேட் வாக் செய்து வந்து காண்போரை வெகுவாக கவர்ந்தது.
பிரியங்கா சோப்ரா மெட் காலா நிகழ்ச்சிக்கு அணிந்து வந்திருந்த அழகிய வாலண்டினோ ஆடை மற்றும் புகழ்பெற்ற பல்கேரி நிறுவனத்தின் 11.6 காரட் வைர நெக்லஸ் ஆகியவை கவனம் பெற்றன. ப்ளூ லகுனா வைரம் பதிக்கப்பட்ட அந்த நெக்லஸ் மிகவும் விலை உயர்ந்ததாம்.
பிரியங்கா சோப்ரா அணிந்து வந்திருந்த பல்கேரி நிறுவனத்தில் ப்ளூ லகுனா நெக்லஸின் விலை இந்திய மதிப்பில் சுமார் ரூ.204 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. இதை அறிந்த ரசிகர்கள் இது நம்ம விஜய் வாங்குற சம்பளத்தை விட டபுள் மடங்கு ரேட்டா இருக்கே என வியப்புடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... 'மெட் காலா' சோவில் கவர்ச்சி உடையில் வந்து கலக்கிய பிரியங்கா