சமந்தாவுக்கு டஃப் கொடுக்க ஐட்டம் டான்ஸ் ஆடிய பிரியாமணி... அதுவும் அட்லீ படத்திலா..!
அட்லீ இயக்கத்தில் உருவாகி வரும் ஜவான் திரைப்படத்தில் நடிகை பிரியாமணி ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ, பாலிவுட்டில் இயக்குனராக அறிமுகமாகி உள்ள திரைப்படம் ஜவான். ஷாருக்கான் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விஜய் சேதுபதி, பிரியாமணி, யோகிபாபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்து வருகிறது. ஜவான் படத்தின் ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது.
ஜவான் படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இப்படத்தின் மூலம் அனிருத்தும், ஷாருக்கானும் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளதால் பாடல்கள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜவான் திரைப்படத்திற்காக பெப்பி சாங் ஒன்றை கம்போஸ் செய்துள்ளாராம் அனிருத்.
இதையும் படியுங்கள்... சூடுபிடிக்கும் பைக் சுற்றுலா பிசினஸ்; 10 வெளிநாட்டு பைக்குகளை இறக்குமதி செய்த அஜித் - அதன் விலை இத்தனை கோடியா?
அனிருத் இசையமைத்துள்ள இந்த பெப்பி சாங்கிற்கு நடிகை பிரியாமணி ஐட்டம் டான்ஸ் ஆடி இருக்கிறாராம். இவர் ஷாருக்கான் படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடுவது இது இரண்டாவது முறையாகும். இதற்கு முன்னர் கடந்த 2013-ம் ஆண்டு வெளியான சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஷாருக்கான் உடன் இணைந்து பிரியாமணி ஆடிய ஐட்டம் டான்ஸ் வேறலெவலில் ஹிட் ஆனதால், தற்போது அதே கூட்டணியில் மீண்டும் ஒரு பாடல் தயாராகி வருகிறது.
இந்தப்பாடல் காட்சி படத்தில் ஹைலைட்டாக அமையும் என்றும், இப்பாடல் முழுக்க ஜெயில் செட் ஒன்றில் படமாக்கப்பட்டு உள்ளதாம். சென்னை எக்ஸ்பிரஸ் பட பாடல் போல் இதுவும் வேறலெவலில் ஹிட் ஆகும் என நடிகை பிரியாமணியே சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். நடிகை பிரியாமணி திருமணமான பின்னர் ஐட்டம் டான்ஸ் ஆடுவது இதுவே முதன்முறை ஆகும். சமந்தாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பிரியாமணி இந்த ஐட்டம் டான்ஸ் ஆடியுள்ளதாக திரையுலக வட்டாரத்தில் பேச்சு அடிபடுகிறது.
இதையும் படியுங்கள்... திருப்பதி கோவில் வளாகத்தில் கீர்த்தி சனோனை திடீரென கட்டிபிடித்து கிஸ் அடித்த ஆதிபுருஷ் இயக்குனர்- வைரல் வீடியோ