Atlee - Priya : அன்பு மனைவிக்கு நெற்றியில் கிஸ்.... அட்லீயின் மும்பை ஜாலி லைஃப்
அட்லீ இயக்கும் பாலிவுட் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருவதால், தன் மனைவி பிரியா உடன் அங்கேயே குடியேறிவிட்டார் அட்லீ.
தமிழ் திரையுலகில் இளம் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் இயக்குனர் அட்லீ. இவர், இயக்கத்தில் வெளியான முதல் படமான 'ராஜா ராணி' மணிரத்னத்தின் மௌனராகம் பட சாயலில் உள்ளதாக விமர்சனங்கள் எழுந்தாலும், சூப்பர் ஹிட் வெற்றிபெற்றது. மேலும் தன்னுடைய முதல் படத்திலேயே... ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா என பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தி இருந்தார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லீ யாருடன் கூட்டணி அமைப்பார், யாரை வைத்து படம் இயக்குவார்? என ரசிகர்கள் காத்திருந்த நிலையில், தளபதி விஜய்யை வைத்து தெறி படத்தை இயக்கி இருந்தார். இந்த படமும் வெற்றி பெற்றதால் அடுத்தடுத்து மெர்சல், பிகில், என தொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து இயக்கி மாஸ் காட்டினார்.
தளபதி விஜய்யை வைத்து, இயக்க ஒரு வாய்ப்பு கிடைக்குமா என பெரிய இயக்குனர்கள் வரை ஏங்கி வரும் நிலையில் இவருக்கு கிடைத்த வாய்ப்புகள் ஜாக்பாட்டாகவே பார்க்கப்பட்டது. மேலும் தளபதி விஜய்யின் பேவரைட் இயக்குனராகவும் வலம் வருகிறார் அட்லீ.
தற்போது, தமிழை தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கானை கதாநாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை நயன்தாரா, ஹீரோயினாக நடிக்கிறார். அட்லீ இயக்கும் முதல் பாலிவுட் படம் இதுவாகும். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருவதால், அங்கேயே தன் மனைவி பிரியா உடன் குடியேறிவிட்டார் அட்லீ.
அட்லீயின் மனைவி பிரியா சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வருபவர் ஆவார். இருவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆனாலும் இன்றளவும் அவர்கள் இடையேயான காதல் குறையவில்லை. அந்த வகையில், தன் காதல் கணவர் தனது நெற்றியில் கிஸ் கொடுத்தபோது எடுத்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார் பிரியா. இந்த புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.