மஞ்சள் நிற வெல்வட் ஷர்ட்டில்... சும்மா டால் அடிக்கும் அழகில் பிரியா பவானி ஷங்கர்! லேட்டஸ்ட் போட்டோஸ்!
விதவிதமான உடையில், போட்டோ ஷூட் செய்து ரசிகர்களை தன்னுடைய அழகால் மயக்கி வரும் பிரியா பவானி ஷங்கர்... தற்போது வெல்வட் போன்ற ஷர்ட் அணிந்து, வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்குள் நுழைந்த மிக குறுகிய நாட்களில் முன்னணி நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு, அடுத்தடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றி நடிக்க துவங்கினார் பிரியா பவானி ஷங்கர். இவரின் அதிஷ்டம், இவர் நடித்த படங்களில் இவரது கதாபாத்திரம் 10 நிமிடம் கூட முழுசா வரவில்லை என்றாலும், படங்கள் ஹிட் லிஸ்டில் இணைந்தது.
இதனால் அதிஷ்டக்கார நாயகி என பெயர் வாங்கி விட்டதால்... அம்மணியின் காட்டில் ஒரு பக்கம் பட மழையும், மற்றொரு புறம் பண மழையும் பொழிகிறது. தன்னை தேடி வரும் வாய்ப்புகளுக்கு நோ என சொல்லமால், கேட்கும் சம்பளத்தை கொடுத்தால் உடனே கமிட் ஆகி விடுகிறார். குறிப்பாக இதுநாள் வரை, ரொமான்டிக் காட்சிகளில் டிஸ்டன்ஸ் மெயின்டெயின் செய்த பிரியா பவானி, பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யாவோடு லிப் டூ லிப் காட்சி வரை இறங்கி நடித்துள்ளார்.
ஏற்கனவே இவர்கள் இருவரும் இணைந்து நடித்த, மான்ஸ்டர் படத்தில்... கெமிஸ்ட்ரி நல்ல வரவேற்பை பெற்றதால், இந்த படத்தில் கொஞ்சம் ஓவராகவே இருவருக்கும் கெமிஸ்ட்ரி... பிசிக்ஸ் எல்லாம் ஒர்க்அவுட் ஆகியுள்ளதாக கூறப்டுகிறது.
தமிழை தாண்டி தெலுங்கு திரையுலகிலும் கால் பதித்துள்ள பிரியா பவானி ஷங்கர் அவ்வப்போது ரசிகர்கள் மனதை மயக்கும் விதமாக, வெரைட்டியான போட்டோ ஷூட் செய்து அதனை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் மஞ்சள் நிற வெல்வெட் ஷர்ட் அணிந்து, எடுத்துக்கொண்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.