சிவகார்த்திகேயனின் 'பிரின்ஸ்' படத்தின் சாட்லைட் & டிஜிட்டல் உரிமை பட்ஜெட்டை விட அதிக விலைக்கு விற்பனையா?
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள, பிரின்ஸ் திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமம் பட்ஜெட்டை விட அதிக தொகைக்கு விற்பனை ஆகியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில், இயக்குனர் அனுதீப் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் முதல் முறையாக இணைந்து நடித்துள்ள 'பிரின்ஸ்' திரைப்படம், அக்டோபர் 21 ஆம் தேதி தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது. எனவே படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்யும் விதமாக, படக்குழு அவ்வப்போது படம் குறித்த முக்கிய தகவல்களை வெளியிட்டு வருகிறது.

மேலும் செய்திகள்: கட்டுக்கடங்காத கவர்ச்சி... பிகினி உடையில் சிக்கென இருக்கும் உடலை காட்டி ரசிகர்களை சூடேற்றும் சித்தி இத்னானி..!
‘பிரின்ஸ்’ படத்தை எடுத்து முடிக்க, ஆன செலவே மொத்தம் 40 கோடி என்று கூறப்படும் நிலையில், டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் உரிமை மட்டுமே இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது திரையுலகினர் மத்தியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக வெளியான 'டாக்டர்' மற்றும் 'டான்', ’டாக்டர்’ மற்றும் ’டான்’ ஆகிய இரண்டு படங்களுமே... சுமார் 100 கோடிக்கு மேல் கல்லா கட்டிய நிலையில், இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பே இந்த படம் இவ்வளவு பெரிய தொகைக்கு விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் இசையமைப்பாளர் தமன் இசையில், 'பிரின்ஸ்' படத்தில் இடம்பெற்ற ம்பிலிக்கி பிளாப்பி பாடல் வெளியாகி ரசிகர்களை துள்ளலாக ஆட்டம் போட வைத்த நிலையில், விரைவில் அடுத்தடுத்த பாடல்களும் வெளியாகியுள்ள என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: பிரபலங்களுடன் மிக எளிமையாக நடந்த மீனாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்..! வைரலாகும் புகைப்படங்கள்..!