தனது மனைவி இந்துவிற்கு வளைகாப்பு நடத்திய பிரேம்ஜி அமரன்; வைரலாகும் போட்டோஸ்!
Premgi Amaran Wife Indhu Baby Shower Photos: பிரேம்ஜி அமரனுக்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருமணம் நடந்து முடிந்த நிலையில், தற்போது மனைவிக்கு வளைகாப்பு நடத்தியுள்ளார்.

கோலிவுட் திரையுலகின் இசை குடும்பமாக பார்க்கப்படும், இளையராஜா குடும்பத்து வாரிசான பிரேம்ஜி தன்னுடைய 45 வயது வரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்த நிலையில், கடந்த மாதம் தான் திருமண பந்தத்தில் இணைந்தார். இவர் திருமணம் செய்து கொண்டுள்ள இந்து, திரையுலகை சேர்ந்த பிரபலம் இல்லை என்றாலும் சமூக வலைதளத்தில் செம்ம ஆக்டிவாக இருப்பவர். இவர் பிரேம்ஜியுடன் எடுத்து கொண்ட போட்டோஸ் மற்றும் வீடியோஸ் சிலவற்றை வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
பிரேம்ஜி தன்னுடைய பெரியப்பா, அப்பா, அண்ணன் யுவன் போல ஒரு இசையமைப்பாளராகவே விரும்பினார். இதனால் கங்கை அமரன் அவரை வெளிநாடுகளுக்கெல்லாம் அனுப்பி இசை பற்றிய படிப்பை படிக்க வைத்தார். ஆனால் யுவனுக்கு கிடைத்தது போன்ற வரவேற்ப்பை பிரேம்ஜி-க்கு கிடைக்கவில்லை. எனவே அப்படியே கொஞ்சம் தன்னுடைய ட்ராக்கை கொஞ்சம் மாற்றி நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.
அப்படி இவர் நடித்த மன்மதன் திரைப்படம் இவரை ரசிகர்கள் மத்தியில் கவனிக்க வைத்தது. இதை தொடர்ந்து, தன்னுடைய அண்ணன் இயக்கிய சென்னை 28 படத்திற்கு பின்னர் பிரேம்ஜியின் காமெடி மட்டும் அல்ல, பாடி லாங்குவேஜும் அதிகம் கவனிக்கப்பட்டது. அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார். குறிப்பாக தன்னுடைய அண்ணன் வெங்கட் பிரபு இயக்கும் படங்களில் ஹீரோவுடனே பயணிக்கும் காமெடியன் வேடத்தில் கவனம் ஈர்த்தார்.
சில படங்களில் ஹீரோவாக நடிக்கும் அளவிற்கு பிரேம்ஜி வளர்ந்த போதிலும்... இவர் நடித்த படங்கள் படுத்து விட்டதால், தற்போது வரை காமெடியனாகவே நீடித்து வருகிறார். மேலும் தற்போது தளபதி விஜய் நடித்துள்ள 'கோட்' படத்திலும் பிரேம்ஜி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடித்து கொண்டிருக்கும் போது தான் பிரேம்ஜி திடீர் என தன்னுடைய திருமணம் குறித்த தகவலை வெளியிட்டார்.
மேலும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்து - பிரேம்ஜி திருமணம் மிக பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில் இப்போது இந்துவிற்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் என்று பலரும் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.