MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அஜித் இல்லேனா என்ன மாமாகுட்டி இருக்காரே... விக்கியின் அடுத்த படத்தில் இணையும் பிளாக்பஸ்டர் நாயகன்..!

அஜித் இல்லேனா என்ன மாமாகுட்டி இருக்காரே... விக்கியின் அடுத்த படத்தில் இணையும் பிளாக்பஸ்டர் நாயகன்..!

ஏகே 62 படத்தில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து இயக்குனர் விக்னேஷ் சிவன், தனது அடுத்த படத்தில் இரண்டு ஹீரோக்களை நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 23 2023, 08:13 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் விக்னேஷ் சிவன், அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்க கடந்த ஆண்டு மார்ச் மாதம் கமிட் ஆனார். அப்படத்தை லைகா நிறுவனம் தயாரிப்பதாகவும், அதற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனால் செம்ம குஷியான விக்கி, எல்லாமே இனிமே நல்லா தான் நடக்கும் என தனது சமூக வலைதள பக்கத்தில் உற்சாகம் பொங்க பதிவிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி ஏகே 62 படத்தின் பணிகளையும் முழுவீச்சில் மேற்கொண்டு வந்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
24

இந்த நிலையில், ஷூட்டிங் செல்ல தயாராகி வந்த நேரத்தில் விக்கியின் தலையில் குண்டை தூக்கிப்போட்டது லைகா நிறுவனம். அவர் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை இப்படத்தில் இருந்து அதிரடியாக நீக்கி உத்தரவிட்டது. இதனால் செம்ம அப்செட் ஆன விக்கி, தனது டுவிட்டர் பயோவில் இருந்து ஏகே 62-வை தூக்கிவிட்டு, விக்கி 6 என அதிரடியாக மாற்றினார். இதையடுத்து விக்னேஷ் சிவன் தனது 6-வது படத்தை யாரை வைத்து இயக்கப்போகிறார் என கேள்வி எழுந்து வந்தது.

இதையும் படியுங்கள்... நீ ஒரு ஆர்டிஸ்ட்னு நிரூபிச்சுட்ட... செல்பி எடுத்து கின்னஸ் சாதனை படைத்த நடிகர் அக்‌ஷய் குமார் - வைரல் வீடியோ

34

அதன்படி விக்கியின் 6-வது படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க உள்ளதாகவும், அவர்கள் இருவரும் இணைந்து ஆக்‌ஷன் கதையம்சம் கொண்ட படம் ஒன்றை எடுக்க தயாராகி வருவதாகவும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோலிவுட்டில் ஒரு தகவல் உலாவி வந்தது. இந்நிலையில், சமீபத்திய தகவல் படி அப்படத்தில் மேலும் ஒரு ஹீரோ நாயகனாக நடிக்க உள்ளதாகவும், விக்கி இப்படத்தை டபுள் ஹீரோ சப்ஜெக்ட்  ஆக எடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

44

அந்த மற்றொரு ஹீரோ வேறு யாருமில்லை, கடந்த ஆண்டு இறுதியில் கோலிவுட்டே மெச்சும் அளவுக்கு பிரம்மாண்ட வெற்றி படத்தை கொடுத்த இயக்குனரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதன் தான். இவருக்கென தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உருவாகி இருப்பதால் அவரை தன் படத்தில் நடிக்க வைத்து பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் முனைப்புடன் களமிறங்க உள்ளாராம் விக்கி. இப்படத்திற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஜெயம் ரவியின் 'அகிலன்' பட ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
பிரதீப் ரங்கநாதன்
விஜய் சேதுபதி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Songs: கொட்டபாக்கும் கொழுந்து வெத்தலையும்.! முப்பது ஆண்டுகளை கடந்தும் நாட்டாமை இசை மனதை மயக்குவது ஏன்?
Recommended image2
Savitri: இறப்பதற்கு முன் நடிகையர் திலகம் சாவித்திரி கூறிய கடைசி வார்த்தைகள்.! கண்ணீர் வரவைக்கும் இறுதி நிமிடங்கள்.!
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved