சிவகார்த்திகேயன் பட சாதனையை சல்லி சல்லியாய் நொறுக்கிய பிரதீப் ரங்கநாதனின் டியூடு
சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தை விட பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டியூடு படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் அதிக தொகைக்கு வாங்கி இருக்கிறது.

Dude Beats Madharasi in OTT Business
ரவி மோகன் நடித்த கோமாளி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படத்திலேயே பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த பிரதீப், அடுத்ததாக கடந்த 2022-ம் ஆண்டு ரிலீஸ் ஆன லவ் டுடே படம் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். அதிலும் வெற்றி கண்ட பிரதீப், முதல் படத்திலேயே 100 கோடி வசூல் அள்ளிய முதல் ஹீரோ என்கிற சாதனையை படைத்தார். இதன்பின்னர் தொடர்ந்து ஹீரோவாக நடிக்க முடிவெடுத்து அவர் தேர்வு செய்து நடித்த படம் தான் டிராகன். அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் திரைக்கு வந்த டிராகன் திரைப்படம் அமோக வெற்றி பெற்று பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.150 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்தது.
பிரதீப் ரங்கநாதனின் டியூடு
அடுத்தடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் இரண்டு படங்கள் தயாராகி வருகின்றன. அதில் ஒன்று விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது. இதுதவிர அவர் கைவசம் உள்ள மற்றொரு திரைப்படமான டியூடு, வருகிற அக்டோபர் மாதம் தீபாவளி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை கீர்த்தீஸ்வரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக மமிதா பைஜு நடித்துள்ளார். இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. சாய் அபயங்கர் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
டியூடு vs மதராஸி ஓடிடி டீல்
இந்த நிலையில் டியூடு படத்தின் பிசினஸ் தற்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அதன்படி இப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. சுமார் ரூ.25 கோடிக்கு டியூடு படத்தின் ஓடிடி உரிமம் விற்பனையாகி உள்ளதாம். பிரதீப் ரங்கநாதனின் கெரியரில் அதிக விலைக்கு விற்பனையான படமும் இதுதான். இதில் ஆச்சர்யம் என்னவென்றால் சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தைவிட பிரதீப் ரங்கநாதனின் டியூடு படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்பிளிக்ஸ் நிறுவனம் பெரும் தொகைக்கு வாங்கி இருக்கிறது. மதராஸி திரைப்படத்தின் ஓடிடி உரிமம் வெறும் ரூ.23 கோடிக்கு தான் விற்பனை செய்யப்பட்டு இருந்தது. இதன்மூலம் ஹீரோவாக நடிக்கும் 3வது படத்திலேயே சிவகார்த்திகேயனை ஓவர்டேக் செய்து மாஸ் காட்டி இருக்கிறார் பிரதீப்.
ரிலீசுக்கு ரெடியாகும் மதராஸி
சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி உள்ளார். இப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 5ந் தேதி திரைக்கு வர உள்ளது. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மிணி வசந்த் நடித்துள்ளார். அமரன் படத்தின் அமோக வெற்றிக்கு பின்னர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகும் படம் இது என்பதால், இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் உடன் வித்யூத் ஜமால், பிக் பாஸ் சாச்சனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து உள்ளார். இப்படம் பற்றிய அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.