MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • படத்தின் மொத்த பட்ஜெட்டையும் இரண்டே நாளில் தட்டித்தூக்கிய லவ் டுடே... 2-ம் நாள் வசூல் நிலவரம் இதோ

படத்தின் மொத்த பட்ஜெட்டையும் இரண்டே நாளில் தட்டித்தூக்கிய லவ் டுடே... 2-ம் நாள் வசூல் நிலவரம் இதோ

பிரதீப் ரங்கநாதன் இயக்கியுள்ள லவ் டுடே படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக இப்படத்திற்கான காட்சிகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. 

1 Min read
Author : Ganesh A
Published : Nov 06 2022, 12:02 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் வெளியான படம் லவ் டுடே. பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரித்து இருந்தது. இப்படத்தின் மூலம் பிரதீப் ஹீரோவாக அறிமுகமாகி உள்ளார். அவருக்கு ஜோடியாக இவானா இப்படத்தில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

24

கடந்த வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் ரிலீசான இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனால் இப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. முதல் நாளில் இப்படம் 2.5 கோடி வசூலித்திருந்த நிலையில், இரண்டாம் நாளில் 5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படியுங்கள்... ஆறுதல் கூற செல்வதற்கே இவ்ளோ அலப்பறையா.. காரின் மேலே அமர்ந்து சென்ற பவன் கல்யாண் - ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள்

34

இதன் மூலம் இரண்டு நாட்களில் இப்படம் ரூ.7.5 கோடிக்கு மேல் வசூலித்து உள்ளது. அதுமட்டுமின்றி இப்படம் தற்போதே லாபத்தை ஈட்டத் தொடங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஏனெனில் இப்படத்தின் மொத்த பட்ஜெட்டே 5 கோடி தானாம். அதனை இரண்டே நாளில் கடந்துவிட்ட இப்படம் தற்போது பிளாக்பஸ்டர் வசூல் சாதனையை நோக்கி நகர்ந்து வருகிறது.

44

லவ் டுடே படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பு காரணமாக இப்படத்திற்கான காட்சிகளும் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சென்னையில் நள்ளிரவு சிறப்பு காட்சிகளெல்லாம் போடும் அளவுக்கு இப்படத்திற்கு செம்ம டிமாண்ட் ஏற்பட்டுள்ளது. இன்றும் விடுமுறை நாள் என்பதால் லவ் டுடே படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ‘லால் சலாம்’ படத்துக்கு முன் இத்தனை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினிகாந்த்? - முழு லிஸ்ட் இதோ

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
போட்டோவால் வெடித்த போராட்டம்... சாட்டையை சுழற்றும் காந்தாரா நாயகிக்கு குவியும் ஆதரவு
Recommended image2
விஜயாவுக்கு ரெய்டு விட்ட ஸ்ருதி... முடிவை மாற்றினாரா மீனா? சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடு
Recommended image3
கார்த்திக்கிற்கு 'மரண ஸ்கெட்ச்' போட்ட சந்திரகலா! போலீசில் சிக்கிய ரேவதி - கார்த்திகை தீபம் சீரியலில் அதிரடி திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved