நடிகர் பவன் கல்யாண், காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் பவன் கல்யாண், அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார். இவர் ஜனசேனா என்கிற கட்சியை நடத்தி வரும் இவர், அக்கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். பொதுவாக தெலுங்கு படங்களில் இடம்பெறும் ஆக்ஷன் காட்சிகள் பெரும்பாலும் கிரிஞ்சாக தான் இருக்கும்.
அதனை ட்ரோல் செய்து ஏராளமான மீம்ஸ்களும் போடப்படுவது வழக்கம். அந்த வகையில், நடிகர் பவன் கல்யாண், காரின் மேற்கூரையில் அமர்ந்தபடி நெடுஞ்சாலையில் பயணிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் செம்ம வைரலாகி வந்தது. அது ஏதோ படத்தின் ஷூட்டிங் என நினைத்து அந்த வீடியோவை பலரும் பகிர்ந்து வந்தனர்.
இதையும் படியுங்கள்... ‘லால் சலாம்’ படத்துக்கு முன் இத்தனை படங்களில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளாரா ரஜினிகாந்த்? - முழு லிஸ்ட் இதோ
ஆனால் உண்மையில் அது ஷூட்டிங் வீடியோ இல்லையாம், நிஜமாகவே அவ்வாறு சென்றுள்ளார் பவன் கல்யாண். ஆந்திர மாநிலத்தில் உள்ள இப்டம் எனும் கிராமத்தில் உள்ள வீடுகள் சாலை விரிவாக்க பணிகளுக்காக இடிக்கப்பட்டன. இதில் வீடுகளை இழந்த மக்களுக்கு ஆறுதல் கூறுவதற்காகத் தான் அவ்வாறு காரில் சென்றுள்ளார் பவன் கல்யாண்.
இதை அறிந்த நெட்டிசன்கள் அவரை கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர். ஒரு கட்சியின் தலைவனே இதுபோன்று சாலை விதிகளை மீறலாமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். ஒரு சிலரோ ‘இப்படி போய் ஆறுதல் கூறுவதற்கு பதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுக்க வேண்டியது தானே’ என அவருக்கு அறிவுரை கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் முன்னாடியேவா... ரச்சிதாவுக்கு நூல்விட்டு மாட்டிக்கொண்ட ராபர்ட் மாஸ்டர் - கலகப்பான புரோமோ இதோ
