- Home
- Cinema
- Nayanthara : காதல் முறிவுக்கு பின் மீண்டும் நயனுடன் இணையும் பிரபுதேவா... ‘மறுபடியுமா’ என ஷாக் ஆன ரசிகர்கள்
Nayanthara : காதல் முறிவுக்கு பின் மீண்டும் நயனுடன் இணையும் பிரபுதேவா... ‘மறுபடியுமா’ என ஷாக் ஆன ரசிகர்கள்
Nayanthara : காதல் முறிவுக்கு பின்னர் சிம்புவுடன் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது தனது முன்னாள் காதலனனான பிரபுதேவாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி உள்ளார்.

தமிழ் திரையுலகில் முன்னணி ஹீரோயினாக வலம் வரும் நயன்தாரா, தற்போது இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். சுமார் 7 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வரும் இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டே நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
விக்னேஷ் சிவனை காதலிப்பதற்கு முன்னர் நடிகை நயன்தாரா, இரண்டு முறை காதல் தோல்வியை சந்தித்துள்ளார். வல்லவன் படத்தில் நடித்தபோது சிம்புவை காதலித்த அவர், சில ஆண்டுகளிலேயே அவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக பிரேக் அப் செய்தார். இதையடுத்து பிரபல நடன இயக்குனரும், நடிகருமான பிரபுதேவா மீது நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது.
இருவரும் சில ஆண்டுகள் ஜோடியாக சுற்றினர். திருமணம் செய்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவருடன் காதல் முறிவு ஏற்பட்டு பிரிந்தார் நயன். காதல் முறிவுக்கு பின்னர் சிம்புவுடன் இணைந்து இது நம்ம ஆளு படத்தில் நடித்த நயன்தாரா, தற்போது தனது முன்னாள் காதலனனான பிரபுதேவாவுடன் இணைந்து ஒரு படத்தில் பணியாற்றி உள்ளார்.
மோகன் ராஜா இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி வரும் படம் காட்ஃபாதர். மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற லூசிபர் படத்தின் தெலுங்கு ரீமேக்காக இப்படம் தயாராகி வருகிறது. இதில் சிரஞ்சீவி நாயகனாக நடித்துள்ளார். நடிகை நயன் தாராவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் இடம்பெறும் ஒரு பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைத்துள்ளார். ஆனால் அப்பாடலில் நயன்தாரா இடம்பெறவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... காத்துவாக்குல ரெண்டு காதல் சக்சஸ் ஆனதும் சொகுசு கார் வாங்கிய விக்னேஷ் சிவன் - விலை இத்தனை கோடியா?
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.