vignesh shivan : காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்றை வாங்கி உள்ளார். 

சிம்புவின் போடா போடி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் விக்னேஷ் சிவன். இதையடுத்து இவர் இயக்கிய நானும் ரவுடி தான் திரைப்படம் அவரது சினிமா கெரியரிலும், வாழ்க்கையிலும் திருப்புமுனையை ஏற்படுத்தியது. இப்படத்தின் போது தான் நடிகை நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இதையடுத்து சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தை இயக்கினார் விக்னேஷ் சிவன். இப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. தற்போது 4 ஆண்டுகள் இடைவெளிக்கு பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியாகி உள்ள படம் காத்துவாக்குல ரெண்டு காதல். விஜய் சேதுபதி, சமந்தா, நயன்தாரா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் கடந்த வாரம் வெளியானது.

இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பியது. இப்படம் வெளியான 4 நாட்களிலேயே 34 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. முதல் வார இறுதியிலேயே படத்தின் பட்ஜெட்டை விட அதிக தொகை வசூலித்ததால் இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதாக அறிவிக்கப்பட்டது.

"

படத்தின் வெற்றியால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கும் விக்னேஷ் சிவன் தற்போது விலையுயர்ந்த ஃபெராரி கார் ஒன்றை வாங்கி உள்ளார். அந்த காரை ஓட்டும் போது எடுத்த புகைப்படங்களையும், வீடியோவையும் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார் விக்கி. தனது போன் கவரில் கூட ஃபெராரி கார் சின்னம் தான் இருக்கும், அந்த அளவுக்கு இந்த காரின் மீது ஆசை வைத்திருந்ததாகவும், தற்போது அந்த காரை வாங்கி உள்ளது மிகுந்த சந்தோஷத்தை தருவதாகவும் விக்கி கூறி உள்ளார். இந்த காரின் விலை ரூ.6 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Thalaivar 169 : தலைவர் 169-ல் வில்லன் இவரா?... ரஜினியை அடிக்க மாஸ் நடிகரை களமிறக்கிய நெல்சன்