நயன்தாராவை நேர்ல பார்த்தால் அடிப்பேன் - பரபரப்பை கிளப்பிய பிரபுதேவாவின் மாஜி மனைவி
பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத் பழைய பேட்டி ஒன்றில் நடிகை நயன்தாராவை கடுமையாக சாடி பேசியது தற்போது மீண்டும் வைரலாகிறது.

PrabhuDeva Ex Wife Ramlath Slams Nayanthara
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர் என பன்முகத்திறமை கொண்டவராக வலம் வருகிறார் பிரபுதேவா. இவர் நடிகை நயன்தாராவை காதலித்தது திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டது. இவர்களது உறவு பல சர்ச்சைகளை உருவாக்கியது. ரம்லத் உடன் குடும்பம் நடத்தி வந்த பிரபுதேவா, அவரை விவாகரத்து செய்யாமலே நயன்தாராவை காதலித்தது தான் பெரிய பிரச்சனையாக இருந்தது. 2010ம் ஆண்டு செப்டம்பரில், பிரபுதேவா நயன்தாராவை விரும்புவதாகவும், அவரை மணக்கப் போவதாகவும் வெளிப்படையாக அறிவித்தபோது அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. கணவர் எனக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு, வேறு ஒருவரை மணக்கப் போகிறார் என்று தெரிந்ததும் ரம்லத்துக்கு உலகமே தலைகீழாக மாறியது போல இருந்தது.
பிரபுதேவா நல்ல கணவர்!
அந்த சமயத்தில் பிரபுதேவாவின் முதல் மனைவி ரம்லத் அளித்த பேட்டியில் நயன்தாராவை கடுமையாக சாடி இருந்தார். தனது திருமண வாழ்க்கை பாழானதற்கு நயன்தாரா தான் காரணம் என கூறி இருந்தார். மேலும் “பிரபுதேவா ஒரு நேர்மையான, கனிவான கணவர், அவர் எங்களை மிகவும் அன்புடனும், அக்கறையுடனும் பார்த்துக்கொண்டார். சமீபத்தில் எங்களுக்காக ஒரு வீட்டை வாங்கினார். ஆனால் இப்போது எல்லாம் மாறிவிட்டது. அவரது தற்போதைய நடத்தை எனக்கும், தேவாவின் குடும்பத்திற்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே திருமணமான ஒருவர் மற்றொரு பெண்ணை மணக்க குடும்பச் சட்டம் அனுமதிக்காது” என்று ரம்லத் கூறினார்.
இதையும் படியுங்கள்... Prabhu Deva: பிரபுதேவா - லட்சுமி மேனன் நடித்துள்ள 'எங் மங் சங்' எப்போது ரிலீஸ்?
நயன்தாராவை அடிப்பேன்!
தொடர்ந்து பேசிய ரம்லத், நயன்தாரா கிடைத்தால் அடிப்பேன், அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். வேறொருவரின் கணவரை சட்டவிரோதமாக திருடும் பெண்ணை தண்டிக்க வேண்டும். என் கணவரை திருட முயன்றதற்காக நயன்தாராவை போலீசார், நீதிமன்றம் கைது செய்ய வேண்டும். அந்த நடிகையை எங்காவது பார்த்தால், நான் நிச்சயமாக அவளை அடிப்பேன். மோசமான பெண் யார் என்பதற்கு அவர் ஒரு சிறந்த உதாரணம்” என்று கூறினார். பிரபுதேவா, லதாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர், புற்றுநோயால் ஒரு மகனை இழந்துள்ளனர். மற்றொரு மகன் ரிஷி ராகவேந்திர தேவா தந்தையை போல் நடனத்தில் சிறந்து விளங்குகிறார். அண்மையில் கான்சர்ட் ஒன்றில் பிரபுதேவா தன்னுடைய மகன் உடன் நடனமாடி அசத்தினார்.
இரண்டாவது திருமணம் செய்த பிரபுதேவா!
ரம்லத், பிரபுதேவா ஜோடிக்கு கடந்த 2010ம் ஆண்டு ஜூலையில் விவாகரத்து கிடைத்தது. ஆனால் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்திற்கு நிறைய தடைகள் இருந்ததால், இருவரும் பிரிந்தனர். பல பெண்கள் அமைப்புகள் நயன்தாராவுக்கு எதிராக திரும்பின. பிரபுதேவா நயன்தாராவை மணந்தால் உண்ணாவிரதம் இருப்பேன் என்று ரம்லத் மிரட்டல் விடுத்தார். 2012 இல் நயன்தாரா பிரபுதேவாவுடனான உறவு முடிந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். 2020 இல் பிரபுதேவா, மும்பையைச் சேர்ந்த பிசியோதெரபிஸ்ட் ஹிமானியை மணந்தார். அப்போது அவருக்கு 47 வயது. 2023 இல் இந்த ஜோடிக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தது.
இதையும் படியுங்கள்... இரண்டாவது மனைவி மற்றும் மகளோடு திருப்பதிக்கு திடீர் விசிட் அடித்த பிரபுதேவா