பிரபாஸின் ‘தி ராஜா சாப்’ ஆரம்பமே வேற லெவல்! படத்தின் ப்ரீ புக்கிங் மட்டும் இத்தனை கோடியா?
இயக்குநர் மாருதி இயக்கத்தில், பிரபாஸ் நடித்துள்ள 'தி ராஜா சாப்' திரைப்படம் வெளியாகி சாதனை படைத்துள்ளது. ப்ரீ புக்கிங் மூலம் சுமார் ரூ. 60 கோடி வசூலித்த இப்படம், முதல் நாளிலேயே உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சாதனை மேல் சாதனை
பிரபாஸ் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று (ஜனவரி 9, 2026) வெளியாகியுள்ள திரைப்படம் 'தி ராஜா சாப்' (The Raja Saab). ஹாரர்-காமெடி பாணியில் உருவாகியுள்ள இப்படம், வெளியாவதற்கு முன்பே ப்ரீ புக்கிங் மூலம் பல சாதனைகளைத் தகர்த்துள்ளது.
என்னத ரூ.60 கோடியா?
இயக்குநர் மாருதி இயக்கத்தில், பிரபாஸ் முற்றிலும் புதிய தோற்றத்தில் நடித்துள்ள 'தி ராஜா சாப்' திரைப்படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் சுமார் ரூ. 50 முதல் 60 கோடி வரை எட்டியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாபெரும் முன்பதிவு: வெளிநாட்டு வசூல்
ஆந்திரப் பிரதேசம் மற்றும் வெளிநாடுகளில் இப்படத்திற்கான முன்பதிவு மிகத் தீவிரமாக இருந்தது. குறிப்பாக, ஆந்திராவில் மட்டும் முன்பதிவு மூலம் சுமார் ரூ. 28 கோடியை இப்படம் ஈட்டியுள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பிரபாஸின் படங்களுக்கு இருக்கும் மவுசு காரணமாக, அங்கேயும் பல கோடி ரூபாய் மதிப்பிலான டிக்கெட்டுகள் முன்பே விற்றுத் தீர்ந்துள்ளன. நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படம் தள்ளிப்போனது, 'தி ராஜா சாப்' படத்திற்குத் திரையரங்கு ஒதுக்கீட்டிலும் வசூலிலும் பெரும் சாதகமாக அமைந்துவிட்டது.
ரசிகர்கள் கருத்து
திரையரங்குகளில் படம் பார்த்த ரசிகர்கள், பிரபாஸின் காமெடி டைமிங் மற்றும் படத்தின் கடைசி 40 நிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் மிரட்டலாக இருப்பதாகத் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.இன்று முதல் நாள் முடிவில் இப்படம் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

