தியேட்டரில் சக்கைபோடு போடும் போர் தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் திடீரென தள்ளிவைப்பு
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார், சரத்பாபு நடிப்பில் வெளிவந்த போர்தொழில் படத்தின் ஓடிடி ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டு உள்ளது.
Por Thozhil
சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படம் ரிலீஸ் ஆனதில் இருந்தே அமோக வரவேற்பை பெற்று வருகிறது. சிறு பட்ஜெட் படமாக இருந்தாலும் மக்கள் அளித்த ஆதரவின் காரணமாக இப்படம் ஒரு மாதத்தைக் கடந்தும் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது.
Por Thozhil
போர் தொழில் திரைப்படத்திற்கு அண்மையில் வெற்றி விழாவும் கொண்டாடப்பட்டது. அப்போது இப்படம் 50 கோடிக்கு மேல் வசூலை குவித்துள்ளதாக கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் தயாரிப்பாளர். அந்த விழாவில் பேசிய சரத்குமார் இப்படம் ஓடிடியில் வெளிவந்தாலும், திரையரங்கில் நூறு நாட்கள் வரை ஓட வைக்குமாறு தியேட்டர் உரிமையாளர்களையும், விநியோகஸ்தர்களையும் கேட்டுக்கொண்டார்.
இதையும் படியுங்கள்... வைரமுத்து நல்ல மனுஷனே இல்ல... ரொம்ப சீப்பான ஆளு! தனியா வரச்சொன்னார் - மற்றுமொரு பாடகி பகீர் புகார்
Por Thozhil
வழக்கமாக ஒரு படம் ரிலீஸ் ஆகி 28 நாட்களுக்கு பின் அப்படம் ஓடிடியில் வெளியிடப்படும். அந்த வகையில் போர் தொழில் படம் கடந்த வாரம் ஓடிடியில் வெளிவரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளிவைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் தியேட்டரில் நன்கு வரவேற்பை பெற்று வருவதால், அதன் ஓடிடி வெளியீட்டை தள்ளிவைக்குமாறு தயாரிப்பு தரப்பில் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஓடிடி நிறுவனமும் அப்படத்தின் ரிலீசை தள்ளி வைத்துள்ளது.
Por Thozhil
இதனால் போர் தொழில் திரைப்படம் இந்த மாதம் ஓடிடியில் வெளியாகாது என தெரிகிறது. அப்படம் 50 நாட்களைக் கடந்த பின்னர் ஆகஸ்ட் மாதத்தில் அப்படத்தை ஓடிடியில் வெளியிட திட்டமிட்டு உள்ளார்களாம். போர் தொழில் திரைப்படத்தின் ஓடிடி உரிமையை சோனி லிவ் நிறுவனம் வாங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... விஜய் மகன் சஞ்சய்க்கு ஜோடியாகிறாரா தேவயானியின் மகள் இனியா? வெளிப்படையாக தன் ஆசையை கூறிய இயக்குனர்!