Asianet News TamilAsianet News Tamil

வைரமுத்து நல்ல மனுஷனே இல்ல... ரொம்ப சீப்பான ஆளு! தனியா வரச்சொன்னார் - மற்றுமொரு பாடகி பகீர் புகார்

வைரமுத்து மீது மீடூ புகார் தெரிவித்துள்ள பாடகி வினைதா, அவர் தன்னை தனியாக அழைத்ததாக பகீர் குற்றச்சட்டையும் முன்வைத்து உள்ளார்.

Singer vinaita metoo complaint against vairamuthu says he is a cheap person
Author
First Published Jul 13, 2023, 3:22 PM IST

கவிஞர் வைரமுத்து இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்துக்கள் ஒரு பக்கம் குவிந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை வைரமுத்துவின் வீட்டுக்கே சென்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தார். இதுகுறித்த புகைப்படத்தையும் டுவிட்டரில் வெளியிட்டிருந்தார். இதைப்பார்த்து ஷாக் ஆன பாடகி சின்மயி, தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.

தான் வைரமுத்து மீது மீடூ புகார் கூறி 5 ஆண்டுகள் ஆகியும் அவர் மீது ஆக்‌ஷன் எடுக்காமல் அவருடன் நட்பு பாராட்டி வருகிறீர்களே. திமுகவின் தயவால் தான் அவர் இப்படி பல பெண்களை வாழ்க்கையை சீரழித்துவிட்டு பயமின்றி சுற்றி வருவதாக சாடி இருந்தார். அதுமட்டுமின்றி தற்போது மற்றுமொரு வீடியோ ஒன்றை பதிவிட்டு, அதிர்ச்சி கொடுத்துள்ளார். அந்த வீடியோவில் மற்றுமொரு பாடகி வைரமுத்து மீது மீடூ புகார் தெரிவித்து இருக்கிறார்.

இதையும் படியுங்கள்... வைரமுத்து வீட்டுக்கு சென்ற முதல்வர்... ஒரு பாலியல் குற்றவாளியை போய் கொண்டாடுறீங்களேனு வெளுத்துவாங்கிய சின்மயி

Singer vinaita metoo complaint against vairamuthu says he is a cheap person

அவர் பெயர் வினைதா. பின்னணி பாடகியான இவர் யுவன் சங்கர் ராஜா உள்பட பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்கள் இசையில் பாடி இருக்கிறார். இவர் வைரமுத்து மீது புகார் கூறிய வீடியோவை தான் சின்மயி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது : “சின்மயி வைரமுத்துவுக்கு எதிராக பேசினார். நான் அதை ஆதரித்தேன். ஏனெனில் அவர் உண்மையை பேசினார். அவருக்கு நடந்ததை போல் எனக்கும் நடந்தது. அதுவும் வைரமுத்துவால் தான். அவர் நல்ல மனிதரே இல்லை. அவர் என்னை பாட அழைத்தார், அதோடு ஒரு இடத்தை சொல்லி அங்கு தனியாக வருமாறு என்னை அழைத்தார். அவர் எப்போதும் முகத்தை பார்த்து பேசவே மாட்டார். அந்த அளவுக்கு சீப்பாக நடந்துகொள்வார். வைரமுத்து இதுபோன்று நிறைய பெண்களிடம் தவறாக நடந்துள்ளார். அது எனக்கு தெரியும். எப்போ அவரை பார்த்தாலும், வந்துட்டாண்டா என்று தான் தோன்றும்” என அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் வினைதா. 

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள சின்மயி, வினைதாவை போன்று தமிழக அரசியல் வாதிகளால் ஆதரிக்கப்படும் இந்த தமிழ் கவிஞருக்கு எதிராக பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து பேச வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த மாதம் பாடகி புவனா சேஷன் என்பவர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை அளித்தது குறித்து வெளிப்படையாக பேசிய நிலையில், தற்போது மேலும் ஒரு பாடகி வைரமுத்து மீது புகார் தெரிவித்துள்ளதால் மீடூ விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிரம்மாண்ட இயக்குனரின் மகளுக்கு இவ்வளவு தான் சம்பளமா.... மாவீரனில் நடிக்க அதிதி வாங்கியது எவ்வளவு தெரியுமா?

Follow Us:
Download App:
  • android
  • ios