அஜித்தின் துணிவு பட பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்த போர் தொழில் - அல்டிமேட் ஸ்டாரை ஓரங்கட்டிய சுப்ரீம் ஸ்டார்!
கேரளாவில் அஜித் நடிப்பில் வெளியான துணிவு படம் செய்த லைப் டைம் வசூல் சாதனையை போர் தொழில் திரைப்படம் முறியடித்து கெத்து காட்டி உள்ளது.
Thunivu, Por Thozhil
தமிழ் சினிமாவுக்கு 2023-ம் ஆண்டு ஒரு நம்பிக்கை அளிக்கக்கூடிய ஆண்டாகவே அமைந்துள்ளது. இந்த ஆண்டு இளம் இயக்குனர்களின் படங்கள் வரிசையாக கவனம் ஈர்த்து மிகப்பெரிய அளவில் ஹிட் ஆகி வருகின்றன. முதலில் கடந்த பிப்ரவரி மாதம் கவின் நடித்த தாதா திரைப்படம் வெளியாகி வேறலெவல் ஹிட் அடித்தது. கணேஷ் பாபு என்கிற புதுமுக இயக்குனர் இயக்கிய இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டையை கிளப்பி வெற்றி கண்டது.
Por Thozhil
அடுத்ததாக மார்ச் மாதம் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் வெளிவந்த அயோத்தி திரைப்படம் வெளியாகி விமர்சன ரீதியாக மாபெரும் வரவேற்பை பெற்றதோடு, வசூலையும் வாரிக்குவித்து அசத்தியது. இதையடுத்து ஜெய்பீம் மணிகண்டன் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த குட்நைட் திரைப்படம் குடும்ப ரசிகர்களைக் கவரும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்திற்கும் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.
Por Thozhil
இந்த வரிசையில் புதிதாக இணைந்துள்ள படம் தான் போர் தொழில். விக்னேஷ் ராஜா என்கிற புதுமுக இயக்குனர் இயக்கியிருக்கும் இப்படம் இரண்டு வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. ராட்சசன் படத்தைப் போல் தரமான திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இப்படம் பிரபாஸின் ஆதிபுருஷ் போன்ற பிரம்மாண்ட படங்களை மிஞ்சும் வகையில் பாக்ஸ் ஆபிஸில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... மாமன்னன் படத்தை தமிழக அரசு தடைசெய்யனும்... உதயநிதியின் கடைசி படத்துக்கு போஸ்டர் ஒட்டி எதிர்ப்பு - இது எங்க?
Por Thozhil, Thunivu
அந்த வகையில் தற்போது அப்படம் நிகழ்த்தியுள்ள ஒரு சாதனை, சற்று வியப்பளிக்கக்கூடிய ஒன்று தான். போர் தொழில் படம் தமிழ்நாட்டைப் போல் கேரளாவிலும் சக்கைப்போடு போட்டு வருகிறது. அதன்படி கேரளாவில் கடந்த ஜனவரி மாதம் வெளியான அஜித்தின் துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை தற்போது போர் தொழில் திரைப்படம் முறியடித்து உள்ளது.
கேரளாவில் அஜித்தின் துணிவு படம் வசூலித்த லைஃப் டைம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் ரூ.5 கோடியாம். தற்போது போர் தொழில் திரைப்படம் ரூ.5.1 கோடி வசூலித்து துணிவு படத்தின் பாக்ஸ் ஆபிஸ் சாதனையை முறியடித்துள்ளது. புதுமுக இயக்குனரின் படம் அஜித் போன்ற முன்னணி நடிகரின் படத்தின் வசூல் சாதனையை முறியடித்துள்ளது வியப்பான ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்... பேருந்து ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு கார் பரிசளித்து அதிர்ச்சி கொடுத்த கமல்ஹாசன்