தமிழகத்தில் பிறந்து வளர்ந்து.. தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்களாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைகள் லிஸ்ட் இதோ
தமிழகத்தில் பிறந்து வளர்ந்து தென்னிந்திய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக கலக்கி வரும் நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
சாய் பல்லவி
மலையாள படமான பிரேமம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, பின்னர் தமிழ், தெலுங்கு மொழிகளிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து தற்போது தென்னிந்திய திரையுலகில் டாப் ஹீரோயினாக வலம் வருகிறார். இவர் கோவையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். மருத்துவம் பயின்ற இவர் சிறந்த டான்ஸராகவும் திகழ்ந்து வருகிறார்.
பிரியா பவானி சங்கர்
தமிழ் திரையுலகில் தற்போது பிசியான நடிகை என்றால் அது பிரியா பவானி சங்கர் தான். இவர் கைவசம் தற்போது டஜன் கணக்கிலான படங்கள் உள்ளன. செய்தி வாசிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய பிரியா, பின்னர் சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமானதை அடுத்து தற்போது சினிமாவில் கலக்கி வருகிறார். இவர் சென்னையில் பிறந்து வளர்ந்தவர் ஆவார்.
சமந்தா
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, சென்னையில் பிறந்து வளர்ந்தவர் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. இவர் பல்லாவரத்தில் தான் தனது பள்ளிப்படிப்பை படித்தார். மாஸ்கோவின் காவிரி படம் மூலம் ஹீரோயினாக எண்ட்ரி கொடுத்த இவர், தற்போது பாலிவுட் வரை சென்று கலக்கி வருகிறார்.
கீர்த்தி சுரேஷ்
நடிகை கீர்த்தி சுரேஷும் சென்னையில் பிறந்தவர் தான். இவரது தந்தை சுரேஷ் குமார் மலையாளத்தில் பிரபலமான தயாரிப்பாளர் ஆவார். கீர்த்தி சுரேஷின் தாயார் மேனகா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஆவார். சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்த கீர்த்தி சுரேஷ், ஹீரோயினாக அறிமுகமானதும் இது என்ன மாயம் என்கிற தமிழ் படம் மூலம் தான்.
இதையும் படியுங்கள்... 90ஸ் கிட்ஸின் பேவரைட் சீரியல்களான மர்மதேசம், ஜீ பூம் பாவில் நடித்த பிரபலம் தற்கொலை - சோகத்தில் திரையுலகினர்
திரிஷா
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளுக்கு மேலாக முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கும் திரிஷா, பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். இவர் மிஸ் சென்னை அழகிப்போட்டியில் பட்டம் வென்ற பின்னர் தான் சினிமாவில் இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது. மெளனம் பேசியதே படத்தில் தொடங்கிய இவரது திரைப்பயணம் தற்போது ரிலீசாகி உள்ள பொன்னியின் செல்வன் வரை சக்சஸ்புல்லாக இருந்து வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவர் தெலுங்கு குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில் தான். தொகுப்பாளினியாக தனது கெரியரை தொடங்கிய இவர், காக்கா முட்டை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானார். தற்போது தமிழ் சினிமாவில் டாப் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
நிவேதா பெத்துராஜ்
மதுரையில் பிறந்து வளர்ந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ். இவர் தமிழில் வெளியான ஒரு நாள் கூத்து படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதையடுத்து தமிழில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்காததால் தெலுங்கு திரையுலகம் பக்கம் சென்ற இவர், அங்கு சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஐஸ்வர்யா மேனன்
தமிழ் படம் 2 மூலம் ஹீரோயினாக அறிமுகமான நடிகை ஐஸ்வர்யா மேனன், ஈரோட்டில் பிறந்து வளர்ந்தவர் ஆவார். இவர் தமிழில் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்த நான் சிரித்தால் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இவர் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.
இதையும் படியுங்கள்... தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பிகில் கிளப்பும் பொன்னியின் செல்வன்