தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூல்... பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் பிகில் கிளப்பும் பொன்னியின் செல்வன்
Ponniyin selvan : வலிமை, பீஸ்ட், விக்ரம் மற்றும் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்கள் தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை கடந்திருந்த நிலையில், தற்போது பொன்னியின் செல்வனும் அந்த லிஸ்டில் இணைந்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிப்பில் மணிரத்னம் இயக்கியுள்ள படம் பொன்னியின் செல்வன். ஜெயம் ரவி, கார்த்தி, விக்ரம், திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, சரத்குமார், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை மையமாக வைத்து இப்படத்தை இயக்கியுள்ளார் மணிரத்னம்.
ரூ.500 கோடி பட்ஜெட்டில் 2 பாகங்களாக தயாராகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த வாரம் உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. வெளியானது முதல் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வரும் இப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் வசூல் மழை பொழிந்து வருகிறது. உலகளவில் ரூ.300 கோடி வசூலை நெருங்கி வரும் இப்படம், தமிழக பாக்ஸ் ஆபிஸிலும் ஒரு மகத்தான சாதனையை படைத்துள்ளது.
இதையும் படியுங்கள்... அந்த ஒரு நிமிட உரையாடல்... நன்றி தலைவா - ரஜினியின் சர்ப்ரைஸ் வாழ்த்தால் சிலாகித்துப்போன ஜெயம் ரவி
அதன்படி பொன்னியின் செல்வன் திரைப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ.100 கோடி வசூலித்து உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் ரூ.100 கோடி வசூலை எட்டிய ஐந்தாவது படம் பொன்னியின் செல்வன் ஆகும். இதற்கு முன்னர் அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், கமலின் விக்ரம் மற்றும் யஷ்ஷின் கே.ஜி.எஃப் 2 ஆகிய படங்கள் ரூ.100 கோடி வசூலை கடந்திருந்தன.
தமிழ்நாட்டில் அதிக வசூல் ஈட்டிய படமாக கமலின் விக்ரம் இருந்து வரும் நிலையில், பொன்னியின் செல்வன் திரைப்படம் அந்த சாதனையை விரைவில் முறியடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இன்றும் விடுமுறை நாள் என்பதால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படியுங்கள்... பிக் பாஸ் சீசன் 6 பைனல் லிஸ்ட் இதோ? யாரெல்லாம் இருக்காங்க தெரியுமா