பிரபல பாடகிக்கு ICU-வில் தீவிர சிகிச்சை! உடல் நிலை கவலைக்கிடம்..? அதிர்ச்சியில் மூழ்கிய ரசிகர்கள்!
பிரபல அமெரிக்க பாப் பாடகியான, மடோனா பாக்டீரியா தொற்று காரணமாக மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருக்கும் நிலையில், இவரின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க பாப் பாடகி மடோனா, ஒரு பாடகியாக 40 ஆண்டுகளை நிறைவு செய்வதை ரசிகர்களுடன் கொண்டாடும் விதமாக, இசை சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்ட நிலையில்... இதற்காக தீவிர பயிற்சியில் ஈடுபட்ட போது, ஸ்டுடியோவில் மயங்கி விழுந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மடோனா தீவிர பாக்டீரியா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில், உடல்நிலை மோசமானதால் ICU -பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மடோனாவை அவரின் மகள் உடனிருந்து கவனித்து வரும் வருகிறார்.
மேலும் மடோனாவின் மேலாளர், போட்டுள்ள பதிவில், மடோனா தீவிர சிகிச்சையில் இருப்பதால் அவரின் அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்வதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக கனடாவின் வான்கூவரில் ஜூலை 15 ஆம் தேதி நடக்கவிருந்த மனோடாவின் நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ள போதிலும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியாத நிலையில் தற்போது நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அதே போல் இவரின் உடல்நிலை குறித்து வெளியாகியுள்ள தகவலில், தற்போது வரை கவலைக்கிடமாக தான் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல், மடோனாவின் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் மடோனா நலம் பெற தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள். மடோனா 7 முறை கிராமிய விருதை பெற்றவர். பாப் பாடகி என்பதை தாண்டி ஹாலிவுட் திரையுலகினர் மத்தியில் தன்னை ஒரு எழுத்தாளராகவும், நடிகையாகவும் நிலைநிறுத்தி கொண்டார்.
தன்னுடைய வாழ்க்கையில் பல கஷ்டங்களை சிறு வயதில் இருந்தே அனுபவித்தால் பல சமூக சேவை பணிகளையும் செய்து வருகிறார். தனக்கு இரண்டு குழந்தைகள் இருந்த போதும்.. மேலும் நான்கு குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வரும் இவர், படிப்பு என்பது ஒவ்வொரு குழந்தையின் அழிக்க முடியாத சொத்து என்பதை தெரிவிக்கும் விதமாக சுமார் 10 பள்ளிகளை கட்டி கொடுத்து, அதற்க்கு நிதி உதவியும் வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.