MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • காதலர் தின ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என்னென்ன?

காதலர் தின ஸ்பெஷலாக இந்த வாரம் தியேட்டர் & ஓடிடியில் போட்டிபோட்டு ரிலீஸ் ஆக உள்ள படங்கள் என்னென்ன?

காதலர் தினத்தை ஒட்டி பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் தியேட்டர் மற்றும் ஓடிடி தளங்களில் என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன என்பதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Ganesh A
Published : Feb 10 2026, 02:16 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
This Week Theatre and OTT Release Movies
Image Credit : X

This Week Theatre and OTT Release Movies

காதலர் தினம் என்றாலே காதல் படங்கள் தான் போட்டிபோட்டு ரிலீஸ் ஆகும். ஆனால் இந்த ஆண்டு காதலர் தினத்திற்கு பல பிளாக்பஸ்டர் ஹிட் காதல் படங்கள் போட்டிபோட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. இந்த வாரம் மட்டும் மொத்தம் நான்கு கிளாசிக் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. இதுதவிர தியேட்டரிலும் புதுப்படங்கள் வரிசைக்கட்டி ரிலீஸ் ஆகின்றன. அதேபோல் ஓடிடியிலும் பொங்கல் வெளியீடாக வந்த படங்கள் இந்த வாரம் முதல் ஸ்ட்ரீம் ஆக உள்ளன. அது என்னென்ன படங்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

24
தியேட்டர் ரிலீஸ் படங்கள்
Image Credit : X

தியேட்டர் ரிலீஸ் படங்கள்

தியேட்டரில் ஆறு புதுப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன. அதன்படி கணேஷ் சந்திரா இயக்கத்தில் அஜய் திஷான் நடித்துள்ள பூக்கி திரைப்படம் பிப்ரவரி 13-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்திற்கு விஜய் ஆண்டனி தான் இசையமைத்துள்ளார்.

சசிகுமார் ஹீரோவாக நடித்துள்ள படம் மை லார்டு. இப்படத்தை ராஜு முருகன் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படமும் பிப்ரவரி 13ந் தேதி திரைக்கு வருகிறது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கியுள்ள படம் சீதா பயணம். இப்படத்தில் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா கதையின் நாயகியாக நடித்துள்ளார். இப்படம் காதலர் தினமான பிப்ரவரி 14ந் தேதி ரிலீஸ் ஆகிறது.

இதுதவிர ஆண்ட்ரியா ஹீரோயினாக நடித்த கா திரைப்படமும், புதுமுகங்கள் நடித்த மையிலாஞ்சி, சிறு பட்ஜெட் படமான ஸ்வீட்டி நாட்டி கிரேஸி ஆகிய படங்களும் இந்த வாரம் திரைக்கு வர உள்ளன.

Related Articles

Related image1
காசு கேட்டு கழுத்தை நெறிக்கும் ஓடிடி... ஜனநாயகனுக்கு அடிமேல் அடி; லேட்டாவதால் இம்புட்டு நஷ்டமா?
Related image2
தலைவர் தம்பி தலைமையில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... ஜீவா படத்தின் லைஃப்டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?
34
ரீ-ரிலீஸ் படங்கள்
Image Credit : X

ரீ-ரிலீஸ் படங்கள்

காதலர் தினத்திற்காக இந்த வாரம் நான்கு கிளாசிக் ஹிட் படங்கள் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. அதில் ஒன்று, டி.ராஜேந்தர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த கிளாசிக் ஹிட் காதல் படமான ‘உயிருள்ளவரை உஷா’ திரைப்படம். இதுதவிர அமீர் இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடிப்பில் வெளியான ரொமாண்டிக் திரைப்படமான மெளனம் பேசியதே. கெளதம் மேனன் - மாதவன் கூட்டணியில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மின்னலே. குணால் நடிப்பில் வெளியாகி ஹிட்டான ‘காதலர் தினம்’ ஆகிய நான்கு படங்கள் தான் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன. இதில் காதலர் தினம் படம் மட்டும் பிப்ரவரி 14-ல் ரிலீஸ் ஆகிறது. மற்ற மூன்று படங்களில் பிப்ரவரி 13-ந் தேதி திரைக்கு வருகின்றன.

44
ஓடிடி ரிலீஸ் படங்கள்
Image Credit : X

ஓடிடி ரிலீஸ் படங்கள்

இந்த வாரம் ஓடிடியில் தமிழ் சினிமாவிற்கு இந்த ஆண்டு முதல் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த படமான ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படம் பிப்ரவரி 12-ந் தேதி முதல் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது. இதுதவிர் சிரஞ்சீவி, நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு தெலுங்கில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான மனசங்கர வரபிரசாத் காரு திரைப்படம் பிப்ரவரி 11 முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆக உள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஓடிடி
தமிழ் சினிமா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஆதவனுடன் 2வது திருமணமா? உண்மையை போட்டுடைத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை விலாசினி
Recommended image2
சிறகடிக்க ஆசை ரோகிணியின் நிஜ கணவர் இவரா..? மேக்-அப் இல்லாத ஒரிஜினல் சல்மா எப்படி இருப்பார் தெரியுமா..?
Recommended image3
வழக்கை வாபஸ் வாங்கிய ஜனநாயகன் படக்குழு... சென்சார் போர்டின் அடுத்தக்கட்ட ஆக்‌ஷன் என்ன?
Related Stories
Recommended image1
காசு கேட்டு கழுத்தை நெறிக்கும் ஓடிடி... ஜனநாயகனுக்கு அடிமேல் அடி; லேட்டாவதால் இம்புட்டு நஷ்டமா?
Recommended image2
தலைவர் தம்பி தலைமையில் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு... ஜீவா படத்தின் லைஃப்டைம் வசூல் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved