பூஜா ஹெக்டேயின் டாப் 5 தோல்வி படங்கள்: முதல் படமே தோல்வி!
Pooja Hegde Top 5 Flop Movies : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து வரும் பூஜா ஹெக்டே கொடுத்த டாப் 5 தோல்வி படங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பூஜா ஹெக்டே
Pooja Hegde Top 5 Flop Movies : தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பூஜா ஹெக்டே. நடிகை ராஷ்மிகா மந்தனாவிற்கு பிறகு அதிக படங்களில் நடித்து வரும் நடிகைகளில் பூஜா ஹெக்டேவும் ஒருவர். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் பல படங்களில் நடித்துள்ளார்.
முகமூடி
கடந்த 2012 ஆம் ஆண்டு திரைக்கு வந்த முகமூடி படம் மூலமாக சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, பூஜா ஹெக்டே ஆகியோர் பலர் நடிப்பில் திரைக்கு வந்த இந்தப் படம் படம் மோசமான தோல்வியை சந்தித்தது. பூஜாவிற்கு முதல் படமே தோல்வி படமாக அமைந்தது.
முகுந்தா
இயக்குநர் ஸ்ரீகாந்த் அட்டாலா இயக்கத்தில் வருண் தேஜா, பூஜா ஹெக்டே ஆகியோர் பலர் நடிப்பில் 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த தெலுங்கு படம் தன் முகுந்தா. இந்தப் படம் அவருக்கு தோல்வி படமாக அமைந்தது.
மொஹஞ்சாதாரோ:
இயக்குநர் அஷுதோஷ் கோவரிகர் இயக்கத்தில் ஹிருத்திக் ரோஷன், பூஜா ஹெக்டே, கபீர் பேடி ஆகியோர் பலர நடிப்பில் 2016ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் மொஹஞ்சாதாரோ. பூஜா ஹெக்டே முதல் முறையாக பாலிவுட்டில் நடித்த இந்த படம் அவருக்கு தோல்வியை கொடுத்தது.
சாக்ஷியம்:
இயக்குநர் ஸ்ரீவாஸ் இயக்கத்தில் சாய் ஸ்ரீனிவாஸ் பெல்லம்கொண்டா, பூஜா ஹெக்டே, ஆர் சரத்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் சாக்ஷியம். ஃபேண்டஸி ஆக்ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பூஜாவிற்கு பெரிய அளவிற்கு ரீச் கொடுக்கவில்லை.
ராதே ஷியாம்:
கடந்த 2021 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் தான் ராதே ஷியாம். இயக்குநர் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ், பூஜா ஹெக்டே, கிருஷ்ணம் ராஜூ, சத்யராஜ், சூர்யா, தலைவாசல் விஜய் என்று ஏராளமான நட்சத்திரங்கல் நடிப்பில் இந்தப் படம் திரைக்கு வந்தது. இந்திய கால காதல் கற்பனை நாடகக் கதையை மையப்படுத்திய இந்தப் படம் பட்ஜெட்டை விட குறைவாகவே வசூல் குவித்து தோல்வி படமாக அமைந்துவிட்டது.
இன்னும் ஒரு சில படங்களை பூஜா ஹெக்டே தோல்வி கொடுத்தார்
இதே போன்று ஆச்சார்யா, சர்க்கஸ், Kisi Ka Bhai Kisi Ki Jaan ஆகிய தோல்வி படங்களையும் கொடுத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா, பூஜா ஹெக்டே ஆக்யோரது நடிப்பில் உருவான ரெட்ரோ படம் திரைக்கு வந்தது. மே 1ஆம் தேதி வெளியான இந்தப் படம் இந்தியளவில் முதல் நாளில் ரூ.19.25 கோடி வசூல் குவித்தது. 2ஆவது நாளில் ரூ.12 கோடி வசூல் குவித்தது. இதைத் தொடர்ந்து 3ஆவது நாளில் ரூ.18 கோடி வசூல் குவித்துள்ளது. நேற்று இந்தப் படம் ரூ.21 கோடி வரையில் குவித்துள்ளதாக கூறப்படுகிறது. கடந்த 4 நாட்களில் மொத்தமாக ரூ.70.75 கோடி வசூல் குவித்து ஹிட் படமாக மாறி வருகிறது.
பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகி வரும் புதிய படங்கள்
ரெட்ரோ படத்திற்கு பிறகு பூஜா ஹெக்டே ரஜினிகாந்தின் கூலி படத்தில் ஒரு பாடல் ஒன்றிற்கு நடனம் ஆடியிருக்கிறார். அதன் பிறகு தளபதி விஜய்யின் ஜன நாயகன் படத்திலும், ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி வரும் காஞ்சனா 4 படத்திலும் நடித்து வருகிறார். தமிழில் முகமூடி படத்திற்கு பிறகு வேறு எந்த தோல்வி படத்தையும் பூஜா ஹெக்டே கொடுக்கவில்லை.
முகமூடி படத்திற்கு பிறகு விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும் வசூல் எடுத்துள்ளது. தற்போது ரெட்ரோ படமும் வசூல் குவித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

