MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சூர்யாவின் 'ரெட்ரோ' வசூலில் மாஸ் காட்டியதா - ஃபியூஸ் போனதா? 2-ஆவது நாள் வசூல் விவரம்!

சூர்யாவின் 'ரெட்ரோ' வசூலில் மாஸ் காட்டியதா - ஃபியூஸ் போனதா? 2-ஆவது நாள் வசூல் விவரம்!

சூர்யா நடிப்பில், மே 1-ஆம் தேதி ரிலீஸ் ஆன 'ரெட்ரோ' திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : May 03 2025, 11:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15

Retro Day 2 Box Office Collection: தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா. தன்னுடைய ஒவ்வொரு படத்தின் கதையிலும், கதாபாத்திரத்திலும் வித்தியாசம் காட்டி வருகிறார். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான 'கங்குவா' திரைப்படம் ரூ.2000 கோடி வசூல் செய்யும் என்கிற எதிர்பார்ப்புடன் வெளியான நிலையில், மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. கடந்த சில வருடங்களாகவே தொடர்ந்து தோல்வி முகத்தை கண்டு வரும் சூர்யா கண்டிப்பாக அடுத்ததாக ஒரு ஹிட் படத்தை கொடுக்க வேண்டும் என்கிற சூழலுக்கு தள்ளப்பட்டார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25
மே 1-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது ரெட்ரோ

மே 1-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது ரெட்ரோ

இந்நிலையில், சூர்யா, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்த அவரது  44-வது திரைப்படமான 'ரெட்ரோ' மே 1-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆனது. இதில் சூர்யா கேங் ஸ்டார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர், சிங்கம் புலி, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
 

Related Articles

Related image1
மீண்டும் வருகிறார் ரோலெக்ஸ்! சூர்யாவுடனான கூட்டணி குறித்து லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!
Related image2
தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ
35
கனிமா பாடல்

கனிமா பாடல்

இந்த படத்தை சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் தங்களது சொந்த நிறுவனமான 2டி நிறுவனம் சார்பில் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். இவர் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றது. குறிப்பாக கனிமா பாடல்... ட்ரெண்டிங் பாடலாக மாறிய நிலையில், பலர் இந்த பாடலுக்கு ரீலிஸ் போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
 

45
எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ரெட்ரோ

எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான ரெட்ரோ

அதீத எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த படம், முதல் நாளில் இருந்தே தொடர்ந்து கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. முதல் நாளில் தமிழ்நாட்டில் மட்டும், ரூ.17.25 கோடி வசூல் செய்ததாகவும், முதல் நாளில் உலக அளவில் 35 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்க வாய்ப்புள்ளது என கூறப்பட்டது. இதை தொடர்ந்து, தற்போது இந்த படத்தின் 2-ஆவது நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

55
ரூ.50 கோடியை நெருங்கிய இரண்டாவது நாள் வசூல்:

ரூ.50 கோடியை நெருங்கிய இரண்டாவது நாள் வசூல்:

அதன்படி 'ரெட்ரோ' திரைப்படம் முதல் நாளை விட இரண்டாவது நாளில் வசூல் குறைவு என்றாலும் ரூ. 50 கோடியை நெருங்கி விட்டதாக கூறப்படுகிறது. ஆனால் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது பற்றிய முழு விவரம் வெளியாகவில்லை. மேலும் இன்று சனி மற்றும் நாளை ஞாயிறு விடுமுறை என்பதால்... வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மொத்தத்தில் விமர்சனம் கொஞ்சம் டல் என்றாலும் சூர்யா ரெட்ரோ வசூலில் மாஸ் காட்டி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ரெட்ரோ திரைப்படம்
சூர்யா
பூஜா ஹெக்டே

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
K.Rajan: தயாரிப்பாளர் கே.ராஜனின் இறுதி நாட்கள்! கார் ஓட்டுநரிடம் தயாரிப்பாளர் கே.ராஜன் சொன்ன கடைசி வார்த்தை!
Recommended image3
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Related Stories
Recommended image1
மீண்டும் வருகிறார் ரோலெக்ஸ்! சூர்யாவுடனான கூட்டணி குறித்து லோகேஷ் கொடுத்த மாஸ் அப்டேட்!
Recommended image2
தமிழ்நாட்டில் முதல் நாளில் அதிக வசூல் அள்ளிய டாப் 5 படங்கள் லிஸ்ட் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved