MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • சோழா சோழா... புதிய போஸ்டருடன் 'பொன்னியின் செல்வன் 1' இரண்டாம் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியானது!

சோழா சோழா... புதிய போஸ்டருடன் 'பொன்னியின் செல்வன் 1' இரண்டாம் சிங்கிள் ரிலீஸ் தேதி வெளியானது!

பொன்னியின் செல்வன் முதல் சிங்கிள் பாடலான 'பொன்னி நதி' பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகும் தேதி புதிய போஸ்டருடன் வெளியாகியுள்ளது. 

2 Min read
Author : manimegalai a
| Updated : Aug 17 2022, 05:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

இயக்குனர் மணிரத்னத்தின் கனவு படமான 'பொன்னியின் செல்வன்' திருப்பிடம் சுமார் 20 ஆண்டுகள் காத்திருப்புக்கு பின்னர் தற்போது உருவாகியுள்ள நிலையில், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி இப்படத்தின் முதல் பாகத்தை படக்குழு வெளியிட உள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என மொத்தம் 5 மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து விட்ட நிலையில், படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் ஒரு பக்கமும், ப்ரமோஷன் பணிகள் மற்றொரு பக்கமும் தீவிரமாக நடந்து வருகிறது.
 

24

பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியான நிலையில்... டீசரில் வந்த ஒவ்வொரு காட்சியும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டும் வகையில் இருந்தது. அதிலும் குறிப்பாக... குந்தவை - நந்தினி இன்ட்ரோ சீன்... வேற லெவலுக்கு இருந்ததாக கூறினர் ரசிகர்கள். இதை தொடர்ந்து 'பொன்னி நதி' என்கிற முதல் சிங்கிள் பாடலை படக்குழு வெளியிட்டிருந்தது. இந்த் பாடலின் வரிகள் ரசிகர்களை மெய் சிலிர்க்க வைத்ததாக கூறினர் ரசிகர்கள்.

மேலும் செய்திகள்: நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட... விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா! வைரலாகும் வீடியோ..
 

34

மேலும் நேற்றைய தினம் கூட, பொன்னியின் செல்வன் திரைப்படம் ஐ மேக்சில் வெளியாக உள்ளதாகவும், இதன் மூலம் ஐ - மேக்சில் வெளியாகும் முதல் தமிழ் படம், பொன்னியின் செல்வன் தான் என படக்குழு தெரிவித்திருந்தது. அதே போல், அடுத்த மாதம் 8 ஆம் தேதி 'பொன்னியின் செல்வன்' படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற உள்ளதாகவும் இதில், முதலமைச்சர் கலந்து கொண்டு ட்ரைலரை வெளியிட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டது.
 

44

இதை தொடர்ந்து மற்றொரு சூப்பர் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதாவது... ஆகஸ்ட் 19 ஆம் தேதி மாலை 6 மணிக்கு, 'பொன்னியின் செல்வன் 1' படத்தில் கரிகால சோழன் பற்றிய பாடலான 'சோழா சோழா' பாடல் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் பாடலான 'பொன்னி நதி' பாடலில், வந்திய தேவன் பற்றி கூறும் விதத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: சேலை மாராப்பை நழுவ விட்டு... முன்னழகை காட்டி இளசுகளை மூட் அவுட் செய்த சாக்ஷி அகர்வால்! ஹாட் போட்டோஸ்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
தமிழ் சினிமா
நடிகர் விக்ரம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பாக்ஸ் ஆபிஸில் மேஜிக் நம்பரை எட்டிய தாய் கிழவி... 10 நாளில் இத்தனை கோடி வசூலா?
Recommended image2
என்னது.. ‘வொர்த்’ ஏ இல்லையா? விஜய்க்கு எதிராக தமிழ் நடிகை சொன்ன பரபரப்பு கருத்து
Recommended image3
ஜனனியை மோப்பம்பிடித்து வந்த ஆலிவர் தேவசகாயம்... ஆதி குணசேகரனனின் அடுத்த பிளான் என்ன? எதிர்நீச்சல் தொடர்கிறது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved