நடு ரோட்டில் குத்தாட்டம் போட்ட... விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா! வைரலாகும் வீடியோ..

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா கனடாவில், நடு ரோட்டில் நின்றபடி... செம்ம குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
 

vijay tv anchor priyanka dance in Canada street

விஜய் டிவியில், அனைத்து தரப்பு ரசிகர்களையும் தன்னுடைய கலகலப்பான பேச்சால் வசீகரித்து, அனைவருக்கும் பிடித்தமான தொகுப்பாளினியாக கலக்கி வருபவர் பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ஒல்லி பெல்லி, பிக்பாஸ் ஜோடிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மிகவும் பிரபலம். கடந்தாண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்று சிறப்பாக விளையாடினார்.

vijay tv anchor priyanka dance in Canada street

பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் தன்னுடைய கலகலப்பான பேச்சால் மற்ற போட்டியாளர்களை முடிந்த வரை சிரிக்க வைத்த பிரியங்கா, தாமரைச் செல்வியுடன் சண்டை போட்டது, நிரூப் உடன் மோதலில் ஈடுபட்டது என பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். எனினும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய இவர், டைட்டில் ஜெயிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவற விட்டார் என கூறலாம். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மீண்டும் விஜய் டிவியில் தன்னுடைய கலகலப்பான பேச்சால் ஒரு தொகுப்பாளராக ரசிகர்களை கவர துவங்கி விட்டார்.

vijay tv anchor priyanka dance in Canada street

இந்நிலையில் தற்போது பிரியங்கா, தன்னுடைய விடுமுறை நாளை கொண்டாடும் நோக்கில், கனடா சென்றுள்ளார் என கூறப்படுகிறது. அங்கு மிகவும் சந்தோஷமாக... நடு ரோட்டில் நின்றபடி, வேற லெவலுக்கு டான்ஸ் ஆடியுள்ளார். இந்த வீடியோவை அவர் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட, அது படு வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் பலரும் பிரியங்கா அழகாக பேசுவது போல் நன்றாக நடனமும் ஆடுகிறார் என தங்களுடைய கருத்தை தெரிவித்து வருவதோடு, இந்த வீடியோவிற்கு லைக்குகளை குவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios