MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொன்னியின் செல்வன் பட பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

பொன்னியின் செல்வன் பட பாடகர் பம்பா பாக்யா திடீர் மரணம் - அதிர்ச்சியில் திரையுலகம்

singer bamba bakya : தமிழில் வெளியான எந்திரன் 2.0, சர்கார், பிகில், பொன்னியின் செல்வன் போன்ற பல்வேறு படங்களில் பாடிய பாடகர் பம்பா பாக்யா இன்று காலமானார்.

1 Min read
Author : Ganesh A
| Updated : Sep 02 2022, 08:20 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

பாடகர் பம்பா பாக்யா காலமானார். அவருக்கு வயது 49. தமிழ் திரையுலகில் ஏராளமான திறமையாளர்களை அடையாளம் கண்டு அவர்களுக்கு வாய்ப்பு கொடுப்பவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். அப்படி அவரான் கண்டறியப்பட்ட ஒரு திறமையாளர் தான் பம்பா பாக்யா. பாடகரான இவர், ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இருந்தே பாடி வருகிறார்.

24

இவர் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானது என்றால் அது ஏ.ஆர்.ரகுமான் இசையில் அவர் பாடிய சிம்ட்டங்காரன் பாடல் மூலம் தான். ஏ.ஆர்.,முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் அப்பாடல் இடம்பெற்று இருக்கும். இதன்பின் ஏ.ஆர்.ரகுமான் இசையில் எந்திரன் திரைப்படத்திற்காக அவர் பாடிய புள்ளினங்காள் பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இதையும் படியுங்கள்... 2.30 மணிநேரத்துக்கு மேல.. படம் எடுத்தா பாம்பு (கோப்ரா) கூட தோத்துபோகும்- அன்றே கணித்த விஜய்.. வைரலாகும் வீடியோ

34

பின்னர் அட்லீ இயக்கத்தில் வெளியான பிகில் படத்தில் இடம்பெறும் காலமே காலமே என்கிற பாடல், இவரது குரலில் வெளியான கவனிக்கத்தக்க பாடல் ஆகும். சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் இடம்பெறும் பொன்னி நதி என்கிற பாடலில் கூட ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்து பாடி இருந்தார் பம்பா பாக்யா. இப்பாடல் தற்போது பட்டிதொட்டியெங்கும் வைரல் ஹிட்டாகி உள்ளது.

44

இந்நிலையில், திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பாடகர் பம்பா பாக்யா இன்று மரணமடைந்துள்ளார். அவருக்கு வயது 49. பாடகர் பம்பா பாக்யாவின் மரணம் கோலிவுட் வட்டாரத்தில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவிற்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் பிம்பிலிக்கி பிளாப்பி பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
புதையல் நகையை கண்டுபிடித்த கார்த்திக்; லாக்கப்பிலிருந்து வெளியே வந்த ரேவதி;வீட்டிற்குள் விடாமல் தடுத்த கொடுமை - கார்த்திகை தீபம் ட்விஸ்ட்!
Recommended image2
ஜனனி - சக்தி ரொமாண்டிக் மூட்! கவலையை மறக்க கொடைக்கானல் டூர் - எதிர்நீச்சல் சீரியலில் அடுத்த அதிரடி!
Recommended image3
பாக்ஸ் ஆபீஸை குறிவைக்கும் சாண்டா 20! விறுவிறுப்பாக நடைபெறும் சந்தானம் பட படப்பிடிப்பு!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved