நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பிரின்ஸ்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'பிம்பிலிக்கு பிளாப்பி' முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுக்க வேண்டும் என்கிற முனைப்புடன், மிகவும் கவனமாக கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், இவர் வெளியான 'டாக்டர்', 'டான்', ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி சூப்பர் ஹிட் ஹிட் வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து இவரது கைவசம், பிரின்ஸ், அயலான், மற்றும் மாவீரன் ஆகிய படங்கள் உள்ளன. இதில் பிரின்ஸ் மற்றும் அயலான் ஆகிய இரண்டு படங்களின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

மாவீரன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆரம்பமாகும் என கூறப்படுகிது. இந்த படத்தில் இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி, 'விருமன்' படத்தை தொடர்ந்து, 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். இந்நிலையில் பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடலான, 'பிம்பிலிக்கி பிளாப்பி' முதல் சிங்கிள் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்த நிலையில், சற்று முன்னர் இந்த பாடல் வெளியாகியுள்ளது.

தமன் இசையில் வெளியாகியுள்ள இந்த பிம்பிலிக்கி பிளாப்பி பாடல் ரசிகர்கள் எழுந்து ஆட்டம் போடும் விதத்தில் உள்ளது. விவேக் பாடல் வரிகள் மிகவும் வித்தியாசமாகவே உள்ளது. அனிருத்தின் குரல் அல்டிமேட்.. தமிழ், தெலுங்கு, என இரு மொழிகளில் உருவாகி வரும் 'பிரின்ஸ்' படத்தை அனு தீபக் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் உக்கிரனைச் செய்த நடிகை மரியா நாயகியாக நடித்துள்ளார். சாந்தி டாக்கிஸ் நிறுவனம் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்துள்ளது. தீபாவளிக்கு இந்த திரைப்படம் வெளியாக உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.பிரின்ஸ் படத்தின் முதல் சிங்கிள் பாடல் தற்போது வெளியாகி சிவகார்த்திகேயன் ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.