66 வயது நடிகருக்கு 30 முறை கிஸ் கொடுத்து... அன்லிமிடட் கவர்ச்சியால் மிரட்டிய பொன்னியின் செல்வன் நடிகை
தி நைட் மேனேஜர் என்கிற வெப்தொடருக்காக 66 வயதாகும் பாலிவுட் நடிகர் அனில் கபூர் உடன் பொன்னியின் செல்வன் நடிகை லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கிய ஷோபிதா துலிபாலா, கடந்த 2016-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தை அனுராஜ் கஷ்யப் இயக்கி இருந்தார். இதையடுத்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்கத் தொடங்கிய ஷோபிதா, கடந்தாண்டு தமிழ் திரையுலகிலும் எண்ட்ரி கொடுத்தார்.
அந்த வகையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வன் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார் ஷோபிதா. அதில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் காதலியும், குந்தவை திரிஷாவின் தோழியுமான வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஷோபிதா. முதல் பாகத்தில் இவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாவிட்டாலும், இரண்டாம் பாகம் முழுக்க இவரது காட்சிகள் அதிகம் இடம்பெறும் என கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... இந்த வாரம் இத்தனை படங்கள் ரிலீஸா! மார்ச் 3-ந் தேதி தியேட்டர் மற்றும் ஓடிடியில் ரிலீசாகும் படங்களின் லிஸ்ட் இதோ
இப்படி பொன்னியின் செல்வன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த ஷோபிதா, பாலிவுட்டில் தற்போது நடித்துள்ள தி நைட் மேனேஜர் என்கிற வெப் தொடரில் கவர்ச்சியில் புகுந்து விளையாடி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பிகினி காட்சிகள், லிப் லாக் முத்தக் காட்சிகள் என அன்லிமிடெட் கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
இதில் சர்ச்சையான விஷயம் என்னவென்றால், இந்த வெப் தொடரில் நடித்துள்ள மூத்த பாலிவுட் நடிகரான அனில் கபூருடன் அவர் 30-க்கும் மேற்பட்ட முத்தக் காட்சிகளில் நடித்துள்ளது தான். 66 வயதாகும் அனில் கபூர் உடன் லிப் லாக் காட்சிகளிலும் ஷோபிதா நடித்துள்ளதை பார்த்து பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர்.
அவரின் இந்த அன்லிமிடெட் கவர்ச்சியால் அவர் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கு பொன்னியின் செல்வன் 2 படத்திற்கும் சிக்கல் ஏற்படலாம் என கூறப்படுகிறது. இந்த வெப் தொடர் குடும்பத்துடன் பார்க்க முடியாதபடி உள்ளதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். ஓடிடியில் சென்சார் இல்லை என்பதால் இப்படியெல்லாம் காட்சிகளை வைப்பதா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... எப்ப பாரு அதே கேள்வி தானா... ஏன் உயிரவாங்குறீங்க? - ரசிகர்கள் கேட்ட அந்த கேள்வியால் கடுப்பான ஓவியா