MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதுவும் எப்போ தெரியுமா?

பொன்னியின் செல்வன் டிரைலரை வெளியிடுகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்... அதுவும் எப்போ தெரியுமா?

Ponniyin selvan 1 : மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 17 2022, 02:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள படம் பொன்னியின் செல்வன். இப்படத்தில் அருள்மொழிவர்மனாக ஜெயம்ரவியும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக திரிஷாவும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும் நடித்திருக்கின்றனர். இதுதவிர விக்ரம் பிரபு, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

24

லைகா நிறுவனம் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். அதன்படி முதல் பாகத்தை வருகிற செப்டம்பர் மாதம் 30-ந் தேதி ரிலீஸ் செய்ய உள்ளனர். ரிலீசுக்கு இன்னும் ஒருமாதமே உள்ளதால் இப்படத்தின் புரமோஷன் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

இதையும் படியுங்கள்... சினிமாவை போல் பிசினஸிலும் சூப்பர்ஸ்டாராக வலம்வரும் நயன்... எந்தெந்த தொழில்களில் முதலீடு செய்துள்ளார் தெரியுமா?

34

கடந்த மாதம் இப்படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி என்கிற பாடல் ஆகியவை வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி ஒவ்வொரு நடிகர்களின் கேரக்டர்கள் அடங்கிய போஸ்டர்களையும் வெளியிட்டு இருந்தனர். இவை அனைத்தும் மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிறச் செய்தது.

44

இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 6-ந் தேதி நடைபெற உள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள உள்ளதாகவும், அவர் தான் அன்றைய நிகழ்வில் பொன்னியின் செல்வன் பட டிரைலரை வெளியிட இருப்பதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்...  தொழிலதிபர் மனைவியை மிரட்டி ரூ.215 கோடி பணம் பறித்த வழக்கு - நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளியாக சேர்ப்பு

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
மு. க. ஸ்டாலின்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Brigida Saga : பவி டீச்சரா இது? ஆளே மாறி கிளாமர் காட்டும் 'பிரிகிடாவா' போட்டோஸ்!
Recommended image2
Reshma Pasupuleti : குட்டி கவுனில் பார்க்க பார்க்க ரசிக்கத் தோனும் லுக்கில் ரேஷ்மா பசுப்புலேட்டி! லேட்டஸ்ட் போட்டோஸ்
Recommended image3
Sanam Shetty : அநியாய கவர்ச்சி.. சனம் ஷெட்டியின் வேற லெவல் கிளாமர் போட்டோஸ்..
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved