- Home
- Cinema
- தெருவைக் காணோம்னு புகார்; சண்டைக்கு வந்த ஊர் மக்கள் - ஜிபி முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
தெருவைக் காணோம்னு புகார்; சண்டைக்கு வந்த ஊர் மக்கள் - ஜிபி முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
யூடியூப் பிரபலமும், நடிகருமான ஜிபி முத்துவிற்கு சொந்தமாக உடன்குடியில் உள்ள வீட்டை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.

People Protest infront of GP Muthu House
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியை சேர்ந்தவர் ஜிபி முத்து. அங்கு மரவேலை பார்த்து வந்த இவர், டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு அதன் மூலம் பிரபலம் ஆனார். குறிப்பாக இவருக்கு வரும் லெட்டர்களை படித்து அதை தனி வீடியோவாக வெளியிட்டு யூடியூபில் அதிக வியூஸ் அள்ளினார் ஜிபி முத்து. அதன் பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அவருக்கு சினிமா வாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால் தற்போது பிசியான நடிகராக வலம் வருகிறார் ஜிபி முத்து.
ஜிபி முத்து போலீசில் புகார்
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள பெருமாள்புரத்தில் ஜிபி முத்துவின் வீடு உள்ளது. அந்தப் பகுதியில் இருந்த கீழத்தெருவை காணவில்லை எனக்கூறி ஜிபி முத்து போலீசில் புகார் அளித்துள்ளார். அங்குள்ள சில நபர்கள் போலி பத்திரம் தயாரித்து கோவில் நிலத்தை விற்றுள்ளதோடு, அந்த தெருவையே ஆக்கிரமிப்பு செய்துள்ளதாகவும், இதைக் கேட்டால் தன்னையும் தன்னுடைய குடும்பத்தாரையும் தகாத வார்த்தைகளால் திட்டி சண்டைக்கு வருவதாகவும் புகார் அளித்துள்ளார் ஜிபி முத்து.
ஜிபி முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
தன்னுடைய புகாருக்கு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தீக்குளிப்பேன் என்றும் ஜிபி முத்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்துள்ளார். கீழத்தெருவை காணவில்லை என ஜிபி முத்து புகார் அளித்த நிலையில், அவரின் புகாருக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது. ஜிபி முத்துவின் வீட்டை முற்றுகையிட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. இதனால் ஜிபி முத்து வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ஜிபி முத்து மீது ஊர் மக்கள் புகார்
ஊர் மக்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி வந்த சமயத்தில் அங்கு ஜிபி முத்து வந்ததால், அங்கு கூடியிருந்த கிராம மக்கள் ஜிபி முத்து ஒழிக என கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. இதனையடுத்து போலீசார் ஜிபி முத்துவை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர். ஜிபி முத்து விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டிய கிராம மக்கள், கோவிலை அதற்கு உரிய இடத்தில் தான் புதுப்பித்து கட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதனால் உடன்குடி பெருமாள்புரத்தில் பரபரப்பு நிலவியது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

