பவர் ஸ்டார் படத்தின் காப்பி தான் குட் பேட் அக்லியா? காட்டுத்தீ போல் பரவும் தகவல்
அஜித் குமார், திரிஷா நடிப்பில் உருவாகி உள்ள குட் பேட் அக்லி திரைப்படத்தின் கதையும், பவர் ஸ்டார் படத்தின் கதையும் ஒன்று தான் என கூறப்படுகிறது.

Good Bad Ugly vs OG : அஜித் குமார் நடிப்பில் ஃபுல் ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகி உள்ளது 'குட் பேட் அக்லி'. இந்த படத்தில் அஜித் ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். மைத்திரி மூவிஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு உள்ளது.
அதேபோல் தெலுங்கில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் ஹீரோவாக நடிக்கும் ‘ஓஜி’ என்கிற கேங்ஸ்டர் திரைப்படமும் உருவாகி வருகிறது. சுஜித் இப்படத்தை இயக்குகிறார். சமீபத்தில் பவன் எங்கு சென்றாலும், ‘ஓஜி.. ஓஜி..’ என்று ரசிகர்கள் கோஷமிடுகிறார்கள். இந்த படத்தின் மீது நல்ல கிரேஸ் உள்ளது. இந்த இரண்டு படங்களுக்கும் கதை ரீதியாக ஒற்றுமை இருப்பதாக சோசியல் மீடியாவில் பேசப்படுகிறது. அதை பற்றி பார்க்கலாம்.
OG Pawan Kalyan
பவன் கல்யாணின் 'ஓஜி' (OG), அஜித் 'குட் பேட் அக்லி' இரண்டு படங்களுக்கும் நல்ல கிரேஸ் உள்ளது. இரண்டு படங்களையும் பான் இந்தியா அளவில் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர். இந்த இரண்டிலும் கதை கேங்க்ஸ்டர்களை சுற்றி வருகிறது.
குறிப்பாக ஹீரோ மாஃபியா கேங்க்ஸ்டர். அவர் தனது கடந்த காலத்தை விட்டுவிட்டு தற்போதைய வாழ்க்கையை மகிழ்ச்சியாகக் கழிக்கிறார். ஆனால் கடந்த காலம் அவரைத் துரத்துகிறது. மீண்டும் கேங்ஸ்டர் உலகம் அவரை அழைக்கிறது.
தவிர்க்க முடியாத சூழ்நிலையில் மீண்டும் கேங்ஸ்டர் உலகில் நுழைந்து எப்படி தன் பழைய பகையை தீர்த்தார் என்பதே கதை. ஆனால் இந்த இரண்டு கதைகளும் ஒரே மாதிரி இருந்தாலும், ட்ரீட்மென்ட் வேறு வேறாக இருக்கும் என்று சொல்கிறார்கள். அதுவே இந்த படங்களை தனித்துவமாக்கும் என்கிறார்கள்.
இதையும் படியுங்கள்... OG Sambavam: சும்மா அதிரவிட்ட அஜித்; 'குட் பேட் அக்லி' ஓஜி சம்பவம் லிரிக்கல் பாடல் வெளியானது!
Ajith Good Bad Ugly
குட் பேட் அக்லி டீசரில் அஜித்தின் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இதனால் இந்த படத்தின் மீது ரசிகர்களுக்கு அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஆக்ஷன் திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த படத்தில் சுனில், பிரசன்னா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார்.
OG vs Good Bad Ugly
ஓஜி 1980-90 களில் நடக்கும் கதை. OG என்றால்.. ஒரிஜினல் கேங்க்ஸ்டர். தமன் (Thaman) இசையமைப்பாளராக இருக்கும் இந்த படத்தில் கோலிவுட் நடிகர் சிம்பு (Silambarasan TR) ஒரு பாடல் பாடியுள்ளார்.
இந்த படம் கேங்க்ஸ்டர் ஆக்ஷன் த்ரில்லர் படமாக ‘ஓஜி’ உருவாகிறது. பிரியங்கா மோகன் ஹீரோயின். பாலிவுட் நடிகர் இம்ரான் ஹாஷ்மி வில்லனாக நடிக்கிறார். அரசியலில் பிஸியாக இருக்கும் பவன் கல்யாண் ‘ஹரி ஹர வீர மல்லு’, ‘உஸ்தாத் பகத் சிங்’ ஆகிய படங்களையும் முடிக்க வேண்டியுள்ளது.
இதையும் படியுங்கள்... அடிச்சு நொறுக்கும் எனெர்ஜியில் ஆதிக்; தெறிக்க விட்ட அஜித்! 'குட் பேட் அக்லீ' மேக்கிங் வீடியோ!