விஜய்யின் லியோ படத்திற்கு எதிர்ப்பு..! ஐந்தாண்டு சிறை தண்டனை கிடைக்கும்- எச்சரிக்கும் பசுமைத்தாயகம்
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ படத்தில் First Look காட்சியில் சிகிரெட் பிடிப்பது போல் இடம்பெற்றுள்ள காட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்த பசுமை தாயகம், புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறினால் 5 ஆண்டு சிறை தண்டனை கிடைக்கும் என எச்சரித்துள்ளது.
லியோ பட First Look காட்சிக்கு எதிர்ப்பு
நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் பெரும்பாலான காட்சிகள் முடிவடைந்துள்ளது. இந்தநிலையில் அந்த படத்தின் First Look காட்சிகளை வெளியிடப்பட்டுள்ளது. அதில் விஜய் சிகிரெட் பிடிப்பது போல் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பசுமை தாயகம் அமைப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில். சிகரெட் நிறுவனங்கள் அவர்களின் வாடிக்கையாளர்களையே கொலை செய்கின்றன.
அந்த இழப்பை ஈடு செய்யும் நோக்கில், இளம்வயதினரை புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமையாக்குவதற்காக, சினிமா ஹீரோக்களை புகைபிடிக்கும் காட்சிகளில் நடிக்கச் செய்கின்றனர். விளம்பரங்களிலும் சுவரொட்டிகளிலும் கதாநாயகன் புகைபிடிக்கும் காட்சிகளை விளம்பரம் செய்கின்றனர். இவ்வாறு விளம்பரம் செய்வது COTPA 2003 இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி குற்றம் என்று தெரிந்தே இந்த விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
நடிகர் விஜய் நடிக்கும் லியோ
நடிகர் விஜய் நடிக்கும் "லியோ" (LEO) திரைப்படத்தின் First Look விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சியினை தற்போது ட்டமிட்டு இடம்பெறச் செய்துள்ளனர். இதை இன்னும் சில நாட்களில் நடிகர் விஜய் நீக்குவார் என தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சிகள் வரலாறு...
2007 "அழகிய தமிழ்மகன்"
நடிகர் விஜய் அழகிய தமிழ்மகன் படத்தில் புகைபிடிப்பது போன்ற காட்சியில் நடித்ததற்கு அப்போது மத்திய சுகாதார அமைச்சராக இருந்த மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, இனி இது போன்ற காட்சிகளில் நடிக்க மாட்டேன் என விஜய் உறுதி அளித்தார். இது பத்திரிகைகளிலும் வெளியானது.
2012 கைவிடப்பட்ட "துப்பாக்கி" புகைபிடிக்கும் காட்சி...
நடிகர் விஜய் நடித்த 'துப்பாக்கி' திரைப்படத்தின் முதல் விளம்பரம் 1.5.2012 அன்று வெளியானது அதிலும் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றது அதற்கு எதிராக
2.5.2012 அன்று காவல்துறை அணையர் அலுவலகத்தில் பசுமைத் தாயகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக 16.5.2012 அன்று காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் நடந்த விசாரணையில், துப்பாக்கி திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது என அளிக்கப்பட்ட வாக்குறுதி அடிப்படையில் துப்பாக்கி திரைப்படத்துக்கு எதிரான நடவடிக்கைகள் கைவிடப்பட்டன.
2018 கைவிடப்பட்ட "சர்க்கார்" புகைபிடிக்கும் காட்சி...
21.06.2018 அன்று நடிகர் விஜய் புகைபிடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ள “சர்க்கார்" (SARKAR) படத்தின் பர்ஸ்ட் லுக் (First Look) முதல் விளம்பரப் படத்தை நடிகர் விஜய் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது தொடர்பாக 23.06.2018 அன்று தமிழக பொதுச் சுகாதாரத் துறையினரிடம் பசுமைத் தாயகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. பொதுச் சுகாதாரத் துறையின் Notice அனுப்பப்பட்ட பின்னர் அந்தக் காட்சிகள் அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன.
2023 "லியோ" பர்ஸ்ட் லுக் காட்சிகளையும் நடிகர் விஜய் நீக்குவார்...
அதே நடிகர் விஜய் நடிக்கும் "லியோ" (LEO) திரைப்படத்தின் முதல் விளம்பரத்தில் புகைபிடிக்கும் காட்சியினை தற்போது மீண்டும் திட்டமிட்டு இடம்பெறச் செய்துள்ளனர் இதையும் இன்னும் நில நாட்களில் நீக்குவார்கள்... ஆனால், 24 மணி நேரத்தில் அந்த பர்ஸ்ட் லுக் புகைபிடிக்கும் காட்சியை சுமார் 73 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் குழந்தைகளாக இருப்பார்கள்... அவர்களில் பலர் புகையிலை பொருட்களை நோக்கி ஈர்க்கப்படுவார்கள். அந்தக் கொடுமைக்கு நடிகர் விஜய் ஒரு முக்கிய காரணமாக இருப்பார்.
குறிப்பு: COTPA 2003 இந்திய புகையிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ் குற்றச்செயலில் முதல்முறை ஈடுபடுபவருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனையும், அதே குற்றத்தை மீண்டும் செய்தால் 5 ஆண்டு தண்டனையும் அளிக்க வழிசெய்யப்பட்டுள்ளதாக பசுமை தாயகம் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
இது தான் நீங்கள் எனக்கு கொடுக்கும் பரிசு! மாணவ - மாணவிகளிடம் விஜய் வைத்த கோரிக்கை!