காலில் விழுந்தும் பார்த்திபன் படத்துக்கு இசையமைக்க மறுத்த இளையராஜா - காரணம் "குருநாதர்" தானாம்?
Director Parthiban : தன்னுடைய முதல் படத்திற்கு இளையராஜா இசையமைக்க முடியாது என்று மறுத்தது குறித்து பேசியுள்ளார் இயக்குனர் பார்த்திபன்.
Director Parthiban
தமிழ் திரையுலகில் தனித்துவமான கதை அம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் சிறந்தவர் பார்த்திபன் என்றால் அது மிகையல்ல. அந்த அளவிற்கு, குறைந்த படங்களையே இயக்கியிருந்தாலும் அவை அனைத்து இன்றளவும் சிறந்த படங்களாகவே திகழ்ந்து வருகின்றது. கடந்த 1989ம் ஆண்டு வெளியான "புதிய பாதை" என்ற படத்தின் மூலம் தான் பார்த்திபன் இயக்குனராக தமிழ் திரையுலகில் களமிறங்கினார் என்றாலும் கூட அதற்கு முன்னதாக பிரபல இயக்குனர் பாக்கியராஜின் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றினார். அதுமட்டுமல்ல 1981ம் ஆண்டு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான "ராணுவ வீரன்" என்ற படத்தின் மூலம் தான் இவர் நடிகராகவும் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
இப்படி தமிழ் சினிமாவில் தனது துவக்க காலத்தில் இருந்தே சிறந்த நடிகராகவும், இயக்குனராகவும் பயணித்து வரும் பார்த்திபன் தான் இயக்கிய முதல் திரைப்படத்திற்காகவே ஒரு தேசிய விருதையும், தமிழக அரசு வழங்கும் இரு மாநில விருதுகளையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மணிரத்னம் படம் முதல்... தளபதிக்கு ஜோடியாகும் வாய்ப்பு வரை 5 படங்களை மிஸ் செய்த சாய் பல்லவி!
Bhagyaraj
பார்த்திபன் இயக்கத்தில் கடந்த 1989ம் ஆண்டு வெளியான "புதிய பாதை", கடந்த 1999ம் ஆண்டு வெளியான "House Full" மற்றும் கடந்த 2019ம் ஆண்டு வெளியான "ஒத்த செருப்பு" உள்ளிட்ட மூன்று படங்களுக்காக தேசிய விருது வென்றவர் பார்த்திபன் என்பது குறிப்பிடத்தக்கது. இயக்குனர், கதாசிரியர், தயாரிப்பாளர், பாடகர், வசனகர்த்தா, விநியோகஸ்தர் என்று தமிழ் சினிமாவை பொறுத்தவரை பன்முக திறமையோடு வலம்வரும் சிறந்த கலைஞர்களில் இவரும் ஒருவர். தன்னுடைய படம் சிறிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம் என்றாலும், தன்னுடைய கதையை நம்பி பெரிய படங்களோடு மோதும் தைரியம் கொண்டவர் பார்த்திபன்.
அண்மையில் பிரபல நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்தோடு தனது டீன்ஸ் படத்தை வெளியிட்டு அதில் வெற்றியும் கண்டவர் பார்த்திபன் என்பதே அவருடைய தைரியத்திற்கு ஒரு சான்று.
Ilayaraja
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு பிரபல இயக்குனர் மற்றும் நடிகர் சித்ரா லக்ஷ்மணனை சந்தித்து பேசியபோது இளையராஜா குறித்து சில விஷயங்களை பார்த்திபன் பகிர்ந்துகொண்டார். அதாவது.. அந்த காலகட்டத்தில் புது முக இயக்குனர்கள் என்றாலே இளையராஜாவை தான் தங்கள் முதல் படத்தில் இசையமைப்பாளராக போட்டுக்கொள்வார்கள். அப்படி தான் நானும் என்னுடைய முதல் திரைப்படத்திற்கு இளையராஜாவை இசையமைப்பாளராக போடலாம் என்று நினைத்து அவரிடம் அது அது குறித்து பேச சென்றேன். ஆனால் இறுதி வரை என்ன முடியாது, வேண்டுமென்றால் நீயே மியூசிக் போட்டு படத்தை வெளியிட்டுக்கொள் என்று கூறிவிட்டார்.
எத்தனையோ முறை நான் அவர் காலில் கூட விழுந்தேன், ஆனால் என் குருநாதர் பாக்கியராஜ் மீது இருந்த கோபத்தின் காரணமாக என்னுடைய படங்களுக்கு இசையமைக்க முடியாது என்று தீர்க்கமாக கூறிவிட்டார் இளையராஜா. இறுதியில் சந்திரபோஸ் இசையில் தான் என்னுடைய முதல் படமான "புதிய பாதை" வெளியானது என்றார்.
Puthiya Pathai
1988ம் ஆண்டு எழுத்தாளர் பாலகுமாரன் இயக்கத்தில் பாக்கியராஜ் நடித்து வெளியான படம் தான் "இது நம்ம ஆளு". முதலில் இந்த படத்திற்கு பாக்கியராஜே இசையமைக்கலாம் என்று எண்ணி, அதற்கு பிறகு தான் இளையராவிடம் கால்ஷீட் கேட்கப்பட்டது. ஆனால் பாக்கியராஜ் இசையமைக்க இருந்தது இளையராஜாவுக்கு தெரியவர, கோபத்தில் அந்த படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று கூறிவிட்டார். இறுதியாக இது நம்ம ஆளு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இசைமைப்பாளராகவும் களமிறங்கினார் பாக்கியராஜ்.
இந்த சம்பவத்திற்கு பிறகு கொஞ்சம் காலம் பாக்கியராஜுக்கு மட்டுமல்ல, அவருடைய உதவி இயக்குனர்களின் படத்திற்கும் இசையமைக்க மறுத்து வந்தார் இளையராஜா. அப்படி அவர் மறுத்தது தான் பார்த்திபனின் முதல் படமான "புதிய பாதை".
சிறுத்தை சிவா தம்பி பாலாவை சிறையில் தள்ளியவர்; யார் இந்த அம்ருதா சுரேஷ்?