ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 மூவீஸ் & வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட் இதோ
ஓடிடி தளங்களில் கடந்த ஆகஸ்ட் 4-ந் தேதி முதல் 10ந் தேதி வரை அதிக பார்வைகளை பெற்ற படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியலை ஓர்மேக்ஸ் தளம் வெளியிட்டு உள்ளது.

Top 5 Most Watched Movies and Web series on OTT
ஓடிடி தளங்களில் புதுப்படங்கள் வார வாரம் வெளியான வண்ணம் உள்ளன. தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்கள் 28 நாட்களில் ஓடிடிக்கு வந்துவிடுவதால், அதில் புதுப்படங்களை பார்க்கவே மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தியேட்டருக்கு ஃபேமிலியோடு சென்றால் 1000 ரூபாய் காலியாகிவிடும். அதே அளவு பணத்தை வைத்து ஓடிடி தளங்களில் வருடம் முழுக்க விதவிதமான படங்களை பார்க்கலாம் என்பதால், ஓடிடி தளங்களில் படம் பார்ப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்களின் பட்டியல் வெளியாகி உள்ளது.
ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட டாப் 5 படங்கள்
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்களின் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் தம்முடு என்கிற தெலுங்குப் படம் உள்ளது. நிதின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் சப்தமி கெளடா, சுவாசிகா, வர்ஷா பொல்லம்மா போன்ற நாயகிகள் நடித்துள்ளனர். இப்படம் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படத்திற்கு கடந்த வாரம் மட்டும் 12 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக இந்தியில் பிருத்விராஜ் சுகுமாரன், கஜோல் நடிப்பில் வெளியாகி சக்கைப்போடு போட்டு வரும் சாராசமீன் திரைப்படம் உள்ளது. ஜியோ ஹாட்ஸ்டாரின் ஸ்ட்ரீம் ஆகி வரும் இப்படத்திற்கு 14 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
டாப் 3-ல் இரண்டு தமிழ் படங்கள்
தியேட்டரில் போட்டிபோட்டு வெளியாகி வெற்றிபெற்ற பறந்து போ மற்றும் 3 பிஹெச்கே ஆகிய திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியிலும் அதிக வியூஸ் அள்ளி உள்ளன. அதன்படி சித்தார்த், சரத்குமார், தேவையானி நடிப்பில் வெளிவந்த 3 பிஹெச்கே திரைப்படம், தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இப்படத்திற்கு கடந்த வாரத்தில் மட்டும் 17 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது.
அதேபோல் ராம் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, அஞ்சலி, விஜய் யேசுதாஸ் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற பறந்து போ திரைப்படம். தற்போது ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது. இந்த படத்திற்கு 22 லட்சம் வியூஸ் கிடைத்துள்ளது. வழக்கம்போல் முதலிடத்தை பாலிவுட் படம் தான் பிடித்துள்ளது. அக்ஷய் குமார் நடித்துள்ள ஹவுஸ்ஃபுல் 5 திரைப்படம் 65 லட்சம் வியூஸ் உடன் அமேசான் பிரைமில் ஸ்ட்ரீம் ஆகி வருகிறது.
ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 வெப் தொடர்கள்
ஓடிடியில் அதிக பார்வைகளை பெற்ற வெப் தொடர்கள் பட்டியலில் ஸ்பெஷல் OPS சீசன் 2 வெப் தொடர் 30 லட்சம் வியூஸ் உடன் முதலிடத்தில் உள்ளது. இந்த வெப் தொடர் ஜியோ ஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது. அடுத்ததாக நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகும் மண்டேலா மர்டர்ஸ் வெப் தொடர் 27 லட்சம் வியூஸ் உடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. 3வது இடத்தை வெட்னெஸ்டே வெப் தொடரின் இரண்டாவது சீசன் பிடித்துள்ளது. 25 லட்சம் வியூஸ் உடன் இந்த தொடரும் நெட்பிளிக்ஸில் ஸ்ட்ரீம் ஆகிறது. ஜியோ ஹாட்ஸ்டாரில் உள்ள சலகார் என்கிற இந்தி வெப் தொடர் 24 லட்சம் வியூஸ் உடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது. அடுத்ததாக ஐந்தாம் இடத்தில் நெட்பிளிக்ஸில் உள்ள தி கிரேட் இந்தியன் கபில் ஷோ நிகழ்ச்சி 19 லட்சம் வியூஸ்களை பெற்றிருக்கிறது.