- Home
- Cinema
- உண்மையை மறைக்கும் பழனி; படத்துக்கு கூப்பிடும் குமாரு - மீண்டும் சிக்கிய அரசி! பாண்டிய ஸ்டோர்ஸ் அப்டேட்!
உண்மையை மறைக்கும் பழனி; படத்துக்கு கூப்பிடும் குமாரு - மீண்டும் சிக்கிய அரசி! பாண்டிய ஸ்டோர்ஸ் அப்டேட்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இன்றைய எபிசோடு பழனிவேலுவிடம் கேள்வி கேட்பதில் தொடங்கி அரசியிடம் படத்துக்கு போவது பற்றி குமாரு கேட்பதோடு முடிகிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இன்றைய 421ஆவது எபிசோடில், எல்லோருமே பழனிவேலுவிடம் படத்துக்கு சென்று வந்தது பற்றி கேள்வி எழுப்புகிறார்கள். நேற்றைய தினம் பழனிவேல் மற்றும் சுகன்யா இருவரும் ரூ.200 வைத்து கொண்டு படத்துக்கு சென்றனர். ஆனால் சின்ன தியேட்டருக்கு பழனிவேல் கூட்டி செல்ல ஆத்திரமடைந்த சுகன்யா படமே பார்க்க வேண்டாம் என்று சண்டை போட்டு திரும்ப வீட்டிற்கு வந்துவிட்டார்.
பழனிவேலிடம் கோபித்து கொண்டு எதிர்வீட்டுக்கு போன சுகன்யா
பழனி வேலுவிடம் கோபித்து கொண்டு, அவரின் அண்ணன்கள் வீட்டிற்கு சென்றநிலையில், இன்னும் பாண்டியன் வீட்டிற்கு வரவில்லை. இன்றைய எபிசோடில், வேற வழியில்லாமல் பழனிவேல் மட்டுமே தனது மாமாவின் வீட்டிற்கு வந்தார். அவர், டிக்கெட் கிடைக்கவில்லை. அதனால், நாங்கள் படத்திற்கு போகவில்லை என்றும், சுகன்யா அண்ணன்கள் வீட்டிலேயே இருப்பதாக கூறினார்.
குமரனுடன் ஜோடியாக சென்று சிக்கிய அரசி; சுகன்யாவிடம் அசிங்கப்பட்ட பழனி! 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' அப்டேட்!
பழைவேலையும் அண்ணன்கள் வீட்டுக்கு அனுப்பும் பாண்டியன்
அதற்கு பாண்டியன் நீயும் அங்கேயே போய் உன்னுடைய பொண்டாட்டி கூட தங்கிவிட்டு காலையில் வா என்று சொல்லி வீட்டைவிட்டு அனுப்பி வைக்கிறார். ஆனால், பழனிவேலுவிற்கு அங்கே செல்ல மனமில்லை. மொட்டை மாடிக்கு சென்றுவிடுகிறார். அவர் அங்கதான் இருப்பார் என்று சரவணன், செந்தில், கதிர் என்று மூவரும் அவருடன் பேசி அரட்டை அடிக்கிறார்கள். கடைசியில் எல்லோருமே தூங்கும் போது சரவணன் மட்டும் கீழே போய் தூங்குவதாக சொல்லிவிட்டு தனது அறைக்கு வந்துவிடுகிறார்.
அரசியை சினிமாவுக்கு அழைக்கும் குமாரு
அங்கு தங்கமயில் தனது அம்மாவுடன் போனில் பேசிக்கொண்டிருக்கிறார். வேலைக்கு செல்லாமல் இருக்க என்னென்ன வழி என்று சொல்லிக் கொடுக்கிறார். முதலில் குழந்தை பெற்றுக் கொண்டால் வேலைக்கு செல்ல முடியாது என்று ஐடியா கொடுக்கிறார். குழந்தை பெற்றாலும் வேலைக்கு செல்ல வேண்டுமென்று சரவணன் கூறுகிறார். எது எப்படியோ இதை வைத்தே இன்னும் கொஞ்ச காலத்திற்கு இந்த சீரியலை ஓட்டுவார்கள். இது ஒரு புறம் இருக்க கடைசி சேப்டராக காலையில் விடிந்துவிட, அரசி திண்ணையில் அமர்ந்து புக் படிப்பது போன்று தனது காதலன் குமாரை (குமரவேல்) எதிர்நோக்கி காத்திருக்கிறார். அவரும் கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு வெளியில் வர, அரசியை பார்த்து படத்துக்கு போகலாமா என்று கேட்கவே, சுகன்யாவும் வந்து நின்று அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் மீண்டும் சுகன்யா கண்ணில் சிக்குகிறார் அரசி.
தங்கமயிலுக்கு கிடைத்த டிப்ஸ்; பழனிவேலுக்கு பாண்டியன் வெச்ச ஆப்பு - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அப்டேட்!
மீண்டும் சுகன்யா கண்ணில் சிக்கிய அரசி
அவரை கண்டதும் அவர்கள் பேசுவதை நிறுத்த இன்றைய எபிசோடும் முடிகிறது. இனி நாளைய எபிசோடில் நான் தான் படத்துக்கு போகிறார்களா? இல்லையா அல்லது இதை வைத்தே ஏதாவது பிரச்சனை வருமா என்பது தெரியும்.