கோயிலுக்கு வந்த இடத்தில் கொலகாறியான மீனா - பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான தருணம்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் குமரவேலுவை நான் கொன்றுவிட்டேன் என்று மீனா செந்திலுக்கு போன் போட்டு சொல்லும் நிலையில், இன்று என்ன நடக்கிறது என்பதை பார்ப்போம்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலான இப்போது பரபரப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்றைய 466ஆவது எபிசோடில் கோயிலுக்கு சென்ற இடத்தில் இப்போது பாண்டியனின் மருமகள் கொலையும் செய்துள்ளார். அரசியை தனியாக பார்க்க வந்த குமரவேலு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அரசி மறுப்பு தெரிவிக்க அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்கிறார்.
Meena hit Kumaravel
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மீனா:
அரசியை காப்பாற்ற எவ்வளவோ முயற்சி செய்தும் கோமதி, ராஜீ மற்றும் மீனாவால் முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற மீனா அவரை தோசை சுடும் சட்டியால் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில் மயங்கி விழுந்த குமரவேலுவிற்கு மூச்சு பேச்சு இல்லை. இதனால் கொலை செய்துவிட்டோமோ என்ற பயத்தில் மூலையில் உட்கார்ந்து மீனா அழ , கோமதியும், ராஜீயும் குமரவேலுவை எழுப்ப முயற்சி செய்கிறார்கள்.
Pandian Stores 2: அரசியை தேடி அம்பாசமுத்திரம் வரும் குமாரவேல் - கொந்தளித்த கோமதி?
Kumaravel is Death?
மீனாவை தடுத்து நிறுத்தும் கோமதி:
எவ்வளவு தட்டியும் குமரவேல் எழுந்திரிக்கவில்லை. பின்னர் மீனா போலீசுக்கு போன் போட முயற்சி செய்தார். அப்போது அவரை தடுத்து நிறுத்திய கோமதி, போலீஸ் வந்தால் உன்னை மட்டும் அழைத்துக் கொண்டு செல்ல மாட்டார்கள். உன்னுடன் சேர்ந்து எங்கள் 4 பேரையும் தான் ஸ்டேஷனுக்கு கூட்டிக் கொண்டு செல்வார்கள்.
Meena Shocked:
மீனா தானாக வலையில் சிக்கியுள்ளார்:
அத்தை நான் வேண்டுமென்று அவனை அடிக்கவில்லை. அரசியை காப்பாற்றும் போது இப்படி நடந்துவிட்டது என்று அழுது புலம்கிறார்கள். வேறு வழியில்லாம ராஜீ கதிருக்கு போன் போட்டு நடந்தவற்றை எடுத்து சொல்கிறார். இதே போன்று மீனாவும் தான் செய்தது குறித்து செந்திலுக்கு தெரியப்படுத்துகிறார். ஏற்கனவே மீனாவை அரசு வேலையை காலி செய்ய வேண்டும் என்று முத்துவேலுவும், சக்திவேலும் பிளான் பண்ணிக் கொண்டிருக்கும் போது, மீனா தானாக வலையில் சிக்கியுள்ளார். போலீஸ் வந்தால் மீனாவைத்தான் கைது செய்து கூட்டி கொண்டு செல்வார்கள். ஆனால், இதுவரையில் போலீஸுக்கு தெரியப்படுத்தவில்லை.
Pandian Stores 2: கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என சொல்லும் சதீஷ்; மீனா வேலைக்கு வரும் ஆப்பு!
Gomathy Plan:
கோமதி திட்டம்:
கோமதி ஏதோ திட்டம் போடுகிறார். அது என்னவென்று தெரியவில்லை. அவர் மட்டும் இன்னும் பாண்டியனுக்கு தெரியப்படுத்தவில்லை. சக்திவேலு தனது மகனுக்கு போன் போடுகிறார். ஆனால், எடுக்கவில்லை. இதற்கிடையில் ராஜீக்கு வேறு டான்ஸ் நிகழ்ச்சியின் 3ஆவது சுற்றுக்கான போட்டிகள் நடைபெற இருக்கிறது. அதில் கலந்து கொள்வாரா? இல்லையா என்பது பற்றி பொறுத்திருந்து பார்க்கலாம்.