MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Pandian Stores 2: அரசியை தேடி அம்பாசமுத்திரம் வரும் குமாரவேல் - கொந்தளித்த கோமதி?

Pandian Stores 2: அரசியை தேடி அம்பாசமுத்திரம் வரும் குமாரவேல் - கொந்தளித்த கோமதி?

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 464ஆவது எபிசோடில் கோமதியின் பேச்சையும் மீறி ராஜீ டான்ஸ் ஆட சென்றுள்ளார். இதற்கெல்லாம் உடந்தையாக இருந்தது மீனா இருக்கிறார். 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 26 2025, 12:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மீனா அறிவுரை:

'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் இன்றைய 464ஆவது எபிசோடானது அரசிக்கு அறிவுரை சொல்லும் காட்சியுடன் தொடங்குகிறது. சதீஷ் தான் அரசிக்கு ஏற்ற மாப்பிள்ளை. குமரவேல் ஒரு கேடி என்று மீனா அறிவுரை சொல்கிறார். சதீஷ் அனுப்பிய வாய்ஸ் நோட்டை அரசி திரும்ப திரும்ப கேட்கிறார். இதையடுத்து டான்ஸ் நிகழ்ச்சியின் 2ஆவது சுற்றுக்கு போக வேண்டுமே? என்ன பண்ணுவது என்று ராஜீ புலம்பிக் கொண்டிருக்கும் போது... மீனா அத்தையிடம் சொல்லாமல் சென்றுவிடு. சொன்னால் போக முடியாது என்று அவரை டான்ஸ் போட்டிக்கு அனுப்பி வைக்கிறார்.

24
Gomathy Angry

Gomathy Angry

ராஜீ செயலால் கோபத்தில் கோமதி:

அந்த நேரம் பார்த்து கோயிலுக்கு போன கோமதி வரவே எல்லோரையும் தேட, மீனா தூங்குவது போன்று ஆக்‌ஷன் காட்டினார். அவரை தட்டி எழுப்பி ராஜீயை பற்றி கேட்க, அவரோ டான்ஸ் ஆட சென்றிருக்கிறார் என்று மீனா உண்மையை போட்டு உடைத்துள்ளார். இதையடுத்து கோபத்தோடு சென்ற கோமதி, ராஜீயை திட்டிதீர்த்தார். கையில் கம்பு வைத்துக் கொண்டு அதட்டினார். இது எதுவுமே தனக்கு கேட்காத மாதிரி நடித்த ராஜீ தனது பெயர் வந்ததும் மேடை ஏறி டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். இதைப் பார்த்த கோமதி உற்சாகமாக கை தட்டி ஆரவாரம் செய்தார்.

Pandian Stores 2: கல்யாணத்தை நிறுத்திவிடலாம் என சொல்லும் சதீஷ்; மீனா வேலைக்கு வரும் ஆப்பு!

34
Raji Amazing Dance Performance:

Raji Amazing Dance Performance:

ராஜீ ஆட்டத்தை பாராட்டும் ஊர் மக்கள்:

இந்த சுற்றில் வெற்றி பெற்ற ராஜீ 3ஆவது சுற்று போட்டிக்கு தகுதி பெற்றார். இதில், 3 பாடல்களுக்கு டான்ஸ் ஆட வேண்டும். அதில், வெற்றி பெற்றால் கார் பரிசாக கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2ஆவது பரிசு பைக், 3ஆவது பரிசு தங்க செயின். ஊர்க்காரர்கள் ராஜீ டான்ஸ் ஆடியதை பார்த்து அவரை பாராட்டினார்கள். அப்போது கோமதி, இவள் என்னுடைய மருமகள் தான் என்று பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார். கொஞ்ச நேரத்துக்கு முன் அப்படி பேசுனீங்க, இப்போது இப்படி பேசுறீங்க என்று மீனா தன் பங்கிற்கு கிண்டல் செய்கிறார்.

44
Kumaravel Reached in Ambasamuthiram

Kumaravel Reached in Ambasamuthiram

அரசியை தேடி அம்பாசமுத்திரம் வந்த குமரவேல்:

மேலும், எப்படி ஜெயிச்சு முதல் பரிசான காரை ஜெயிச்சு கொடுத்துவிடு. அதை அரசிக்கு கொடுத்துவிடுவோம் என்று கோமதி ராஜீயிடம் கூறினார். இல்லை, இல்லை எனக்கு பைக் வேண்டும் என்று ராஜீ கூற, கடைசியில் காரும் வேண்டாம், பைக்கும் வேண்டாம், தங்கம் ஜெயித்துவிடு என்றார். இதற்கிடையில் சுகன்யா சொன்னதை கேட்டு அரசியை தேடி குமாரவேல் அம்பாசமுத்திரம் வந்து அரசி தங்கியிருக்கும் வீட்டை கண்டுபிடித்து அங்கு சென்றுள்ளார். ஆனால், வீடு பூட்டியிருந்தது. இதனால் வெளியில் காத்துக் கொண்டிருக்கிறார். அதோடு பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இன்றைய 464ஆவது எபிசோடு முடிவுக்கு வந்துள்ளது.

Pandian Stores 2: ராஜீக்கு வலுக்கும் எதிர்ப்பு? சரவணனிடம் சிக்குவாரா தங்கமயில்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 (தொலைக்காட்சித் தொடர்)
விஜய் தொலைக்காட்சி தொடர்கள்
விஜய் தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
அந்த ஒரு சீன் தான் படத்தையே மாத்துச்சு!" - அஞ்சாதே உருவான ரகசியங்களை உடைத்த மிஷ்கின்!
Recommended image2
மயில்வாகனத்திற்கு வந்த சோதனை! கையில் தட்டுடன் ஹோட்டலில் வேலை செய்யும் அவலம் - கார்த்திகை தீபம் லேட்டஸ்ட் அப்டேட்!
Recommended image3
Kayal Marumagal MahaSangamam: மீனாட்சி பிறந்தநாள் விழாவில் அரங்கேறும் பயங்கர சதி! ஆனந்தி, ரோகிணியின் முகத்திரையை கிழிப்பாரா கயல்?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved