மோடியிடம் போய் சொல்... கணவரை இழந்த பெண்ணிடம் பயங்கரவாதிகள் சொன்ன மெசேஜ்
பஹல்காமில் நடந்த தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணிடம், பயங்கரவாதிகள் ‘இதை மோடியிடம் போய் சொல்’ என சொல்லியனுப்பி உள்ளனர்.

Pahalgam Terror Attack : ஜம்மு காஷ்மீரில் உள்ள பஹல்காமில் உள்ள பைசரனில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த பத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு வரப்பட்டன. அங்கு பிரேத பரிசோதனை நடைபெற்ற பின்னர் உடல்களை ஒப்படைக்க 2 நாட்கள் வரை ஆகலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஹல்காம் தாக்குதல் சமயத்தில் சவுதி அரேபியாவில் இருந்த மோடி, இச்சம்பவம் குறித்து அறிந்ததும், தன்னுடைய பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு இன்று காலை இந்தியா வந்தடைந்தார். இந்தியா திரும்பியதும், விமான நிலையத்திலேயே அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தினார்.
Manjunath, Pallavi
பயங்கரவாதி மோடிக்கு சொல்லி அனுப்பிய செய்தி
பஹல்காமில் நடந்த தாக்குதலில் கர்நாடகாவின் சிவமோகாவைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழிலதிபர் மஞ்சுநாத் ராவ் என்பவர் தனது மனைவி முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். பஹல்காமில் தனது கணவர் பயங்கரவாதியால் சுட்டுக் கொல்லப்படுவதை நேரில் கண்ட பல்லவி ராவ், அவர்களிடம் தன்னையும், தன் மகனையும் சுட்டுக் கொன்றுவிடுங்கள் என கேட்டிருக்கிறார். ஆனால் அதற்கு பயங்கரவாதி அளித்த பதில் அதிர்ச்சியளிப்பதாக இருந்தது. "உன்னை நாங்கள் கொல்ல மாட்டோம், போ, போய் மோடியிடம் நடந்ததை சொல்..." என்று கூறிவிட்டு சென்றிருக்கிறான்.
இதையும் படியுங்கள்... பஹல்காம் தாக்குதல்: எந்தத் தொடர்பும் இல்லை என பாகிஸ்தான் மறுப்பு
pahalgam attack
கண்முன்னே கணவரை பறிகொடுத்த பல்லவி
கர்நாடகாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர். மஞ்சுநாத்துடன் பரத் பூஷன் என்பவரும் கொல்லப்பட்டார். 46 வயதாகும் மஞ்சுநாத், தன்னுடைய மனைவி பல்லவியுடன் தங்கள் முதல் வெளிமாநில குடும்ப விடுமுறையைக் கொண்டாட காஷ்மீர் சென்றிருக்கிறார். மகன் அபிஜித்தின் பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுக்குப் பிறகுதான் மஞ்சுநாத் காஷ்மீர் பயணத்திற்கு முன்பதிவு செய்திருக்கிறார்.
ஏப்ரல் 19ந் தேதி சிவமோகாவிலிருந்து சென்ற ஒரு குழுவில் மஞ்சுநாத்தும் அவரது குடும்பத்தினரும் காஷ்மீர் சென்றனர். மல்னாடு அரேகா மார்க்கெட்டிங் கூட்டுறவு சங்கத்தின் பிரூர் கிளையின் கிளை மேலாளராக பல்லவி உள்ளார். மகனுக்கு உணவு வாங்கச் சென்றபோதுதான் மஞ்சுநாத்தை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்
manjunath and pallavi
கலங்க வைக்கும் வீடியோ
தாக்குதலுக்கு சற்று முன்பு இருவரும் பயணத்தைப் பற்றி வீடியோ எடுத்ததும் வெளியாகியுள்ளது. மூன்று நாட்களுக்கு முன்புதான் மஞ்சுநாத் ராவ் தனது மனைவி பல்லவி மற்றும் குழந்தைகளுடன் ஜம்மு காஷ்மீருக்கு வந்தார். காஷ்மீர் மிகவும் அழகாக இருந்ததாகவும், படகோட்டி முகமது ரஃபீக்குடன் ஷிகாரா சவாரி செய்த மகிழ்ச்சியை வெளிப்படுத்தியும் கூறினார். பயங்கரவாதிகள் ஆண்களை மட்டுமே குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பல்லவி தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்... பஹல்காம் பயங்கரவாதிகள் தாக்குதல் : தமிழகத்தை சேர்ந்த 2 பேர் காயம் - யார் இவர்கள்