குடிப்பழக்கத்தால் தற்கொலைக்கு முயற்சி செய்தேன்: பாட்டல் ராதா டிரைலர் வெளியீட்டு விழாவில் பா ரஞ்சித் பேச்சு!
Pa Ranjith Talk About his Suicide attempt during Bottle Radha Trailer Launch : பிரபல இயக்குநரான பா ரஞ்சித் தான் தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறியதை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Bottle Radha Release Date, Pa Ranjith Talk About Suicide Attempt
தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் பா ரஞ்சித். அட்டகத்தி படம் மூலமாக இயக்குநராக அவதாரம் எடுத்தார். மெட்ராஸ், கபாலி, காலா ஆகிய படங்களை இயக்கியுள்ளார். கடைசியாக தங்கலான் படத்தை இயக்கினார். இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இயக்குநராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் இருக்கிறார். பரியேறும் பெருமாள், பொம்மை நாயகி, இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு உள்பட ஒரு சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். தற்போது தண்டகாரண்யம், பைசன், பாட்டில் ராதா ஆகிய படங்களை தயாரித்து வருகிறார்.
Pa Ranjith Talk About Suicide Attempt
சினிமாவையும் தாண்டி அரசியல் களத்திலும் செயல்பாட்டாளராக இருக்கிறார். இந்த நிலையில் தான் பாட்டில் ராதா படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா ரஞ்சித் தான் தற்கொலை செய்து கொள்ள நினைத்ததாக கூறியுள்ளார். இயக்குநர் தினகரன் இயக்கத்தில் குரு சோமசுந்தரம், சஞ்சனா நடராஜன் ஆகியோரது பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் பாட்டல் ராதா. வரும் 24 ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படம் முழுக்க முழுக்க குடிப்பழக்கத்தை மையப்படுத்திய கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.
Bottle Radha Trailer, Bottle Radha Release Date
போதைக்கு அடிமையானவர் எப்படி அதிலிருந்து மீண்டு வருகிறார் என்பதை மையப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இது போன்ற கதையை மையப்படுத்தி பல படங்கள் திரைக்கு வந்துள்ளன. பாட்டல் ராதா படத்தின் டிரைலர் நேற்று வெளியானது. இந்த நிகழ்ச்சியில் பேசிய பா ரஞ்சித் தற்கொலைக்கு முயற்சி செய்தது குறித்து பேசியுள்ளார். இது ரசிகர்களுக்கு மட்டுமின்றி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
Pa Ranjith, Bottle Radha Movie
சாப்பாட்டுக்காக நாங்கள் யாரிடமும் கையேந்தி நின்றது கிடையாது. என்னுடைய அப்பாவும் அந்த நிலைக்கு கொண்டு சென்றது இல்ல. ஆனால், அவர் குடிப்பக்கம் என்று வரும் போது தன்னையே இழந்துவிடுவார். திருவிழா நாளில் ஊரே கொண்டாட்டமாக இருக்கும். ஆனால், என்னுடைய அம்மா மட்டும் அழுது கொண்டே இருப்பாங்க. நான் அப்போது 12ஆவது படித்து கொண்டிருந்தேன். ஒருநாள் என்னுடைய அம்மா அழுவதை தாங்கி கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று யோசித்தேன். அப்பாவை அதிலிருந்து மீட்டு கொண்டு வர அம்மா தான் ரொம்பவே கஷ்டப்பட்டாங்க. கடைசியில் என்னுடைய அப்பா இறந்துவிட்டார். என்னுடைய அம்மா பட்ட கஷ்டத்தை என்னுடைய மனைவியும் படக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.