MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • முதல் நாளை விட இரண்டாம் நாளில் அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் திருச்சிற்றம்பலம்

முதல் நாளை விட இரண்டாம் நாளில் அதிக வசூல்... பாக்ஸ் ஆபிஸில் அதகளம் செய்யும் திருச்சிற்றம்பலம்

Thiruchitrambalam : மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள திருச்சிற்றம்பலம் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : Aug 20 2022, 02:14 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மித்ரன் ஆர் ஜவகர் இயக்கத்தில் தனுஷ் நடித்த படம் திருச்சிற்றம்பலம். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரியா பவானி சங்கர், பிரகாஷ் ராஜ், ராஷி கண்ணா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்திருந்தது. அனிருத் இசையமைத்திருந்த இப்படத்திற்கு ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்திருந்தார்.

24

இப்படத்தில் நடிகர் தனுஷ் உணவு டெலிவரி செய்யும் நபராக நடித்திருந்தார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று முன் தினம் ரிலீஸ் ஆனது. தமிழகத்தில் இப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. சுமார் 400 திரையரங்குகளுக்கு மேல் ரிலீசான இப்படத்திற்கு முதல் நாளில் இருந்தே அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.

இதையும் படியுங்கள்... அந்த இடத்தில் புதிதாக டாட்டூ போட்டுக்கொண்ட நயன்தாரா - அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?

34

அதன்படி இப்படம் முதல் நாளில் மட்டும் ரூ.9 கோடிக்கு மேல் வசூலித்திருந்தது. அதிகாலை 4 மணி காட்சி இல்லாமலேயே இந்த அளவுக்கு வசூலித்தது பெரிய பலமாக பார்க்கப்பட்டது. அதேபோல் இரண்டாம் நாளான நேற்று விடுமுறை தினம் என்பதனால் இப்படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கபபட்டது.

44

அதன்படியே நேற்றும் பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பி உள்ளது இப்படம். அதன்படி இரண்டாவது நாளில் இப்படம் ரூ.10 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் இரண்டே நாட்களில் இப்படம் ரூ.19 கோடி வசூலித்து உள்ளது. இன்றும், நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் இப்படம் மேலும் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள்... கிருஷ்ண ஜெயந்தி வாழ்த்துகளோடு... தன்னுடைய 4 மாத மகனின் புகைப்படத்தை பகிர்ந்த காஜல் அகர்வால்.!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தனுஷ்

Latest Videos
Recommended Stories
Recommended image1
உங்களுக்கு பிடித்த இந்த டாப் 10 பாடல்களும் ஒரே ராகம் தான் தெரியுமா? நீங்க முணுமுணுக்கும் 'ஹிட்' பாடல்களின் ரகசிய சூத்திரம் இதுதான்!
Recommended image2
பத்து நிமிடத்தில் கண்ணதாசன் எழுதிய ‘எவர்கிரீன்’ ஹிட்! டீ குடிக்கும் நேரத்தில் பிறந்த ‘முத்தான’ பாடல் எது தெரியுமா?
Recommended image3
இக்கட்டான சூழலில் எம்.ஜி.ஆருக்கு உதவி செய்த சிவாஜி..! இறுதிவரை நன்றி சொல்லி வந்த மக்கள் திலகம்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved