அந்த இடத்தில் புதிதாக டாட்டூ போட்டுக்கொண்ட நயன்தாரா - அதற்கு என்ன அர்த்தம் தெரியுமா?
Nayanthara : தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாரா போட்டுள்ள புதிய டாட்டூ குறித்த புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகை நயன்தாரா டாட்டூ மீது பிரியம் கொண்டவர் என்பது அனைவருக்குமே தெரியும். அவர் பிரபுதேவாவை காதலித்தபோதே கையில் ‘Pரபு’ என பச்சை குத்திக் கொண்டார். பின்னர் அவரை பிரிந்த பிறகு அதை அப்படியே பாசிட்டிவிட்டி (Positivity) என மாற்றிக் கொண்டார். பிரபு தேவா உடனான பிரிவுக்கு பின்னர் இயக்குனர் விக்னேஷ் சிவன் மீது காதல் வயப்பட்டார் நயன்தாரா.
அவரை சுமார் 7 ஆண்டுகளாக உருகி உருகி காதலித்த நயன் சமீபத்தில் அவரை திருமணமும் செய்துகொண்டார். கடந்த ஜூன் மாதம் திருமணம் முடிந்ததும் தாய்லாந்துக்கு முதல் ஹனிமூன் சென்ற அந்த ஜோடி, தற்போது ஸ்பெயின் நாட்டுக்கு இரண்டாவது ஹனிமூன் கொண்டாட சென்றுள்ளனர். அங்கு எடுக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் தினந்தோறும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார் விக்கி.
இதையும் படியுங்கள்... இதென்னப்பா புது டிரெண்டா இருக்கு... தன்னைத் தானே திருமணம் செய்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த பிரபல நடிகை
குறிப்பாக சுதந்திர தினத்தன்று இவர்கள் இருவரும் அங்கு ஜோடியாக இந்திய தேசியக் கொடியை பிடித்தபடி வலம் வந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது. அதுமட்டுமின்றி சமீபத்தில் நயன்தாராவுடன் நடு ரோட்டில் ரொமான்ஸ் பண்ணியவாரு விக்கி நடத்திய போட்டோஷூட்டும் சோசியல் மீடியாவில் டிரெண்ட் ஆனது.
இந்நிலையில், நடிகை நயன்தாரா போட்டுள்ள புதிய டாட்டூ குறித்த புகைப்படம் வெளியாகி உள்ளது. விக்கி வெளியிட்ட வீடியோவின் மூலம் அந்த டாட்டூ தெரியவந்துள்ளது. அதன்படி அந்த டாட்டூவை தனது பின் கழுத்தில் போட்டுள்ளார் நயன்தாரா, அதில் என்ன வாசகம் எழுதியிருக்கிறது என்பது தெரியாவிட்டாலும், இவ்வாறு கழுத்தில் டாட்டூ போடுவது மிகவும் கஷ்டமான விஷயம் என்றும், அப்படி போடுபவர்கள் மிகவும் சவாலான மற்றும் துணிச்சலான முடிவுகளை எடுக்கக்கூடியவர் என்று அர்த்தமாம்.
இதையும் படியுங்கள்... காதுகளை பாதுகாப்பாக வைத்துகொள்ளுகள்.. நிபந்தனையற்ற அன்புடன் அஜித் கூறிய தகவல்! வைரலாகும் சுரேஷ் சந்திரா ட்விட்