பராசக்திக்கு இவ்ளோ டிமாண்டா! SK மற்றும் விஜய் ஆண்டனியின் 25வது பட டைட்டிலால் குழப்பம்!
சிவகார்த்திகேயனின் 25-வது படத்துக்கு பராசக்தி என டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் ஆண்டனி தன் படத்திற்கும் அதே தலைப்பை வைத்திருக்கிறார்.

ஒரே நேரத்தில் 2 பராசக்தி படங்கள்
பராசக்தி என்று சொன்னதும் நம் நினைவுக்கு வருவது கலைஞரின் வசனமும், சிவாஜி கணேசனின் நடிப்பும் தான். கடந்த 1952-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படத்தின் மூலம் தான் சிவாஜி கணேசன் நடிகராக அறிமுகமானார். இப்படத்திற்காக கலைஞர் எழுதிக் கொடுத்த வசனத்தை உணர்ச்சி பொங்க பேசியதன் மூலம் சிவாஜி கணேசன் பேமஸ் ஆனார். அப்படத்தின் வசனங்களால் பராசக்தி திரைப்படம் இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருக்கிறது.
SK25 டைட்டில் பராசக்தி
இந்நிலையில் தற்போது 73 ஆண்டுகள் கழித்து பராசக்தி டைட்டிலுக்கு செம டிமாண்ட் ஏற்பட்டிருக்கிறது. அந்த டைட்டிலை இரண்டு நடிகர்கள் போட்டிபோட்டு தங்கள் படங்களுக்கு வைத்திருக்கின்றனர். அதில் ஒருவர் சிவகார்த்திகேயன். அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடித்து வரும் எஸ்.கே.25 திரைப்படத்திற்கு பராசக்தி என்று பெயரிடப்பட்டு உள்ளது. இப்படம் நடிகர் சிவகார்த்திகேயனின் 25-வது படமாகும். இப்படத்தில் நடிகர் ரவி மோகன் வில்லனாக நடிக்கிறார். இதன் டைட்டில் டீசர் இன்று மாலை 4 மணிக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
இதையும் படியுங்கள்... சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' புதிய போஸ்டருடன் வெளியான அப்டேட்!
விஜய் ஆண்டனியின் 25வது படம்
சிவகார்த்திகேயன் அந்த டைட்டிலை அறிவிக்கும் முன்னரே நடிகர் விஜய் ஆண்டனி தன்னுடைய 25-வது படத்துக்கு பராசக்தி என பெயரிடப்பட்டு உள்ளதாக அறிவித்திருக்கிறார். இதனால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். ஆனால் அங்கு தான் ஒரு ட்விஸ்ட் இருக்கிறது. தமிழில் பராசக்தி பட டைட்டில் சிவகார்த்திகேயன் கைப்பற்றிவிட்டதால், தன்னுடைய 25-வது படத்தின் தெலுங்கு டைட்டிலை பராசக்தி என வைத்திருக்கிறாராம் விஜய் ஆண்டனி.
சக்தித் திருமகன்
அவரின் 25-வது படத்தின் தமிழ் டைட்டில், சக்தித் திருமகன். இப்படத்தை அருண் பிரபு இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன்னர் அருவி, வாழ் போன்ற திரைப்படங்களை இயக்கியவர் ஆவார். சக்தித் திருமகன் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வரும் விஜய் ஆண்டனி தான் அப்படத்திற்கு இசையமைத்தும் உள்ளார். இப்படம் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தை விஜய் ஆண்டனி தன்னுடைய மனைவி உடன் சேர்ந்து தயாரித்து உள்ளார்.
இதையும் படியுங்கள்... ஜனவரி 31ந் தேதி தியேட்டர் & OTTயில் போட்டிபோட்டு ரிலீசாகும் தமிழ் படங்கள் லிஸ்ட் இதோ