ஹனிமூன்லாம் இல்லைங்க... விக்கி - நயனின் ஃபாரின் ட்ரிப் பின்னணியில் இருக்கும் மேட்டரே வேற..! அது என்ன தெரியுமா?
புதுமண ஜோடிகளான விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இரண்டாவது ஹனிமூன் கொண்டாட ஸ்பெயின் நாட்டிற்கு சென்றதாக கூறப்பட்ட நிலையில், அவர்கள் அங்கு சென்றதற்கான வேறு ஒரு காரணமும் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் நட்சத்திர காதல் ஜோடிகளாக வலம் வந்தவர்கள் விக்னேஷ் சிவன் - நயன்தாரா. சுமார் 7 ஆண்டுகள் உருக உருக காதலித்த இந்த ஜோடி எப்போ திருமணம் செஞ்சிக்குவாங்க என கடந்த 2 ஆண்டுகளாகவே ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்து வந்தது. அதற்கு கடந்த ஜூன் மாதம் தான் விடை கிடைத்தது. பிரபலங்கள் முன்னிலையில் விக்கி - நயன் ஜோடியின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.
திருமணம் முடிந்த கையோடு இருவரும் ஜோடியாக ஹனிமூன் சென்றனர். தாய்லாந்து நாட்டுக்கு சென்ற அவர்கள், அங்கு ஒரு வாரம் தங்கி இருந்து ஹனிமூன் கொண்டாட்டங்களை முடித்துக்கொண்டு நாடு திரும்பினர். தாய்லாந்தில் இருந்து திரும்பிய பின்னர் இருவருமே படு பிசியாகிவிட்டனர். நயன்தாரா ஜவான் பட ஷூட்டிங்கிலும், ஜெயம்ரவியின் இறைவன் பட ஷூட்டிங்கிலும் மாறி மாறி நடிக்க, மறுபுறம் விக்கி செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் பிசியானார்.
தமிழ்நாட்டில் அண்மையில் நடந்து முடிந்த 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் துவக்க விழா தொடங்கி நிறைவு விழா வரை பல பிரம்மாண்டங்களை நிகழ்த்திக் காட்டி அசர வைத்தார் விக்னேஷ் சிவன். அவரது இந்த முயற்சியை கோலிவுட்டே கொண்டாடியது. குறிப்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் நிறைவு விழாவின் போது நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.
இதையும் படியுங்கள்.... நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா... சினிமாவில் 47 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி குறித்து மகள்கள் உருக்கம்
செஸ் ஒலிம்பியாட் போட்டி முடிந்ததும் தனது காதல் மனைவி நயன்தாரா உடன் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றார் விக்னேஷ் சிவன். அவர்கள் இருவரும் இரண்டாவது ஹனிமூனை கொண்டாடத்தான் அங்கு சென்றுள்ளதாகவும் செய்திகள் வலம் வந்தன. ஆனால் அவர்கள் இருவரும் அங்கு சென்றதற்கான காரணமே வேறயாம்.
இயக்குனர் விக்னேஷ் சிவன் அடுத்ததாக அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தை இயக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது. இதற்கான லோகேஷன் பார்க்க தான் தற்போது விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ளாராம். இப்படத்தில் நயன்தாராவும் நடிக்க உள்ளதாக கூறப்படுவதால், இருவரும் ஜோடியாக சென்று ஜாலியாக லோகேஷன் தேர்வில் ஈடுபட்டு வருகிறார்களாம்.
இதன்மூலம் ஒருபக்கம் நயன்தாராவுடன் சுற்றுலா, மறுபக்கம் ஏகே 62 படத்திற்கான லோகேஷன் தேர்வு என ஒரே கல்லில் இரண்டு மாங்கா அடித்துள்ளார் விக்னேஷ் சிவன். அங்கு 10 நாட்கள் சுற்றிப்பார்க்க திட்டமிட்டுள்ள இந்த ஜோடி, சென்னை திரும்பியதும் மீண்டும் பட வேலைகளில் பிசியாக உள்ளது. நயன்தாரா, சென்னையில் நடக்க உள்ள ஜவான் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பில் கலந்துகொள்ள உள்ளார். மறுபுறம் விக்னேஷ் சிவன் ஏ.கே.62 பட வேலைகளை தொடங்க உள்ளார்.
இதையும் படியுங்கள்.... வலிமை நாயகனின் எளிமை... மக்களோடு மக்களாக பேருந்தில் நின்றபடி பயணித்த அஜித் - வைரலாகும் வீடியோ