வலிமை நாயகனின் எளிமை... மக்களோடு மக்களாக பேருந்தில் நின்றபடி பயணித்த அஜித் - வைரலாகும் வீடியோ

Ajith : எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக விசாகப்பட்டினம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார் நடிகர் அஜித்.

Ajith Travelling in Bus video viral while he went for AK 61 shoot

தமிழ் திரையுலகில் சினிமா பின்புலம் இன்றி தன்னம்பிக்கையால் உயர்ந்த நாயகன் என்றால் அது அஜித் தான். மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் மீடியா வெளிச்சத்தில் இருந்து விலகியே இருக்க விரும்புபவர் அஜித். இதன் காரணமாகவே இவர் எந்த ஒரு சோசியல் மீடியாவையும் பயன்படுத்துவதில்லை. இருப்பினும் இவர்மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பு குறைந்தபாடில்லை.

சமீபகாலமாக நடிகர் அஜித் எங்கு சென்றாலும் அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி விடுகின்றன.  அந்த வகையில் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ஏ.கே.61 படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக விசாகப்பட்டிணம் செல்ல இன்று காலை சென்னை விமான நிலையம் வந்திருந்தார் நடிகர் அஜித்.

இதையும் படியுங்கள்... விஜய் சென்ற அதே இடத்தை தேர்வு செய்த அஜித்... அடுத்து எங்கே செல்கிறது AK 61 படக்குழு? வெளியான சூப்பர் அப்டேட்!

விமான நிலையத்தில் இருந்து விமானம் இருக்கும் இடத்திற்கு செல்ல பயணிகள் அனைவரையும் பஸ் ஒன்றில் அழைத்து செல்வர். அப்படி இன்று காலை அஜித் சென்னை விமான நிலையத்தில் ஒரு பேருந்தில் மக்களோடு மக்களாக பயணித்துள்ளார். அந்த பேருந்தில் கூட்டமாக இருந்தபோதிலும் அதில் மிகவும் எளிமையாக நின்றபடியே பயணித்துள்ளார் அஜித்.

அவர் பேருந்தில் நின்றபடி பயணித்தபோது எடுத்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மக்கள் கூட்டத்தை பார்த்தாலே பயந்து ஓடும் பிரபலங்களுக்கு மத்தியில் மக்களோடு மக்களாக மிகவும் எளிமையான மனிதராக அஜித் இருப்பதை பார்த்து வியந்து போயினர். சிலரோ அவரது எளிமையை பாராட்டி சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... Soori : வீடு துடைக்கும் மாப் குச்சியில் தேசியக் கொடியை கட்டி பறக்க விட்ட சூரி... வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios