நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா... சினிமாவில் 47 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினி குறித்து மகள்கள் உருக்கம்
47 years of Rajinism : சினிமாவில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்திற்கு அவரது மகள்களான ஐஸ்வர்யாவும், செளந்தர்யாவும் உருக்கமான வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகில் சூப்பர்ஸ்டாராக வலம் வருபவர் ரஜினிகாந்த். சாதாரண பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்த ரஜினி, சினிமாவின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இவரின் நடிப்புத் திறமையை முதலில் அங்கீகரித்தது இயக்குனர் பாலசந்தர் தான். கடந்த 1975-ம் ஆண்டு வெளிவந்த அபூர்வ ராகங்கள் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தார் ரஜினி.
ஆரம்ப காலகட்டத்தில் பல படங்களில் வில்லனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த ரஜினி, தமிழில் முதன்முதலில் ஹீரோவாக நடித்த படம் பைரவி. இதையடுத்து தொடர்ந்து முள்ளும் மலரும், அவள் அப்படித்தான் போன்ற படங்களில் நடித்து தனது ஸ்டைலான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த ரஜினி, அடுத்தடுத்து சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
நடிகர் ரஜினிகாந்த் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காலி போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார். அபூர்வ ராகங்கள் மூலம் தொடங்கிய இந்த அபூர்வ கலைஞனின் பயணம் தற்போது சினிமாவில் 47 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதையொட்டு ரஜினிக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.
இதையும் படியுங்கள்... இன்னும் ஒரு வருஷமா! பிரபாஸின் ‘சலார்’ படத்தின் புது ரிலீஸ் தேதியை அறிவித்த KGF இயக்குனர்... ஷாக்கான ரசிகர்கள்
இந்நிலையில், ரஜினியின் மகள்களான ஐஸ்வர்யாவும், செளந்தர்யாவும், தனது தந்தை குறித்து டுவிட்டரில் உருக்கமாக பதிவிட்டுள்ளனர். அதில் ரஜினியின் இளைய மகள் செளந்தர்யா போட்டுள்ள பதிவில், 47 வருடங்கள் என்பது மேஜிக் போல் உள்ளது. நீங்கள் கடவுளின் குழந்தை அப்பா. நீங்கள் ஒரு உணர்வு, அதை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. லவ் யூ தலைவா என குறிப்பிட்டு ரஜினியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
அதேபோல் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா போட்டுள்ள பதிவில், 47 ஆண்டுகள் ரஜினியிஸம்... கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பு! மகளாக பிறந்ததில் பெருமை கொள்கிறேன் என குறிப்பிட்டு ரஜினியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார் ஐஸ்வர்யா. இந்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... நயன்தாராவை விட அழகு நீங்க... விக்கியின் டுவிட்டால் மெர்சலாகிப் போன ஆர்த்தி - என்ன ரிப்ளை கொடுத்தாங்க தெரியுமா?