நயன்தாராவை விட அழகு நீங்க... விக்கியின் டுவிட்டால் மெர்சலாகிப் போன ஆர்த்தி - என்ன ரிப்ளை கொடுத்தாங்க தெரியுமா?
BiggBoss Harathi : நடிகை ஆர்த்தியின் போட்டோஷூட் குறித்து கமெண்ட் செய்திருந்த நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஆர்த்தி என குறிப்பிட்டு இருந்தார்.
நடிகை நயன்தாராவின் திருமணம் கடந்த ஜூன் மாதம் 9-ந் தேதி கோலாகலமாக நடைபெற்றது. அவர் தனது நீண்ட நாள் காதலனாக விக்னேஷ் சிவனை அன்றைய தினம் கரம்பிடித்தார். பொதுவாக நடிகைகள் படங்களில் அணியும் ஆடை, அணிகலன்களுக்கு மவுசு அதிகம். அந்த வகையில் நடிகை நயன்தாரா, திருமணத்தன்று அணிந்திருந்த சிகப்பு நிற புடவையும் மிகவும் பேமஸ் ஆனது.
நயன்தாராவின் திருமண சேலை என கடைகளில் விற்கும் அளவுக்கு அவரது புடவை பாப்புலர் ஆனது. அதன்படி நயன்தாரா திருமணத்தில் அணிருந்திருந்தது போலவே பிக்பாஸ் பிரபலமான ஆர்த்தி கணேஷும் உடையணிந்து போட்டோஷூட் ஒன்றை நடத்தி இருந்தார். அதனை அவரே நயன்தாராவோடு ஒப்பிட்டு, கிண்டலடித்து பதிவிட்டிருந்தார்.
இதையும் படியுங்கள்... சூர்யாவின் 'இரும்பு கை மாயாவி' சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
ஆர்த்தியின் இந்த பதிவு வைரல் ஆனதை அடுத்து, நடிகை நயன்தாராவின் கணவர் விக்னேஷ் சிவன், ஆர்த்தியின் போட்டோஷூட் குறித்து கமெண்ட் செய்திருந்தார். அவர் போட்ட பதிவில் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க ஆர்த்தி என குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், விக்னேஷ் சிவனின் இந்த பதிவுக்கு நடிகை ஆர்த்தி நன்றி தெரிவித்து ரிப்ளை செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது : “தங்களின் பாராட்டுதலுக்கு மிக்க நன்றி விக்னேஷ் சிவன் பிரதர். தங்கள் கூறியது போல நானும் என்னை அழகியாகவே பார்க்கிறேன். ஆனால் உண்மையில் தங்களின் பேரழகி மனைவி (தங்கமே). அவர்களைப்போல உடை அலங்காரத்தை நான் செய்து கொண்டதால் தான் இன்னும் மிளிர்கிறேன் என நம்புகிறேன்” என பதிவிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... "இதயத்தை நொறுக்கும் இழப்பு"..திரை விமர்சகர் கெளஷிக் மரணம்..இரங்கல் தெரிவித்த பிரபலங்கள்