சூர்யாவின் 'இரும்பு கை மாயாவி' சூப்பர் அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்
பல ஆண்டுகளுக்கு முன் வெளியான இரும்பு கை மாயாவி படத்தின் தகவல் விக்ரமுக்கு பிறகு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
விக்ரம் படத்தை சமீபத்தில் இயக்கிய லோகேஷ் கனகராஜ் முன்னதாக கார்த்தியின் கைதி மற்றும் விஜயின் மாஸ்டர் படத்தை இயக்கி இருந்தார். இந்த இரு படங்களின் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சிறை, கைதி சார்ந்த கதைக்களத்தை தன் கையில் எடுத்த இயக்குனர் ரசிங்கர்களுக்கு சரியான விருந்தை கொடுத்திருந்தார். இதில் கைதி இரண்டாம் பாகம் விரைவில் படப்பிடிப்புக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றியை ருசித்துக்கொண்டிருந்த லோகேஷுக்கு கமலை இயக்கும் மாபெரும் வாய்ப்பு கிடைத்தது.
மேலும் செய்திகளுக்கு...விசாரணை அதிகாரியாக அர்ஜுன்...வெளியானது செகண்ட் சிங்கிள்
lokesh kanagaraj is taking a break from social media platforms
கமலுக்கான கதைக்களத்தையும், நட்சத்திர பட்டாளத்தையும் முடிவு செய்த லோகேஷ் நீண்ட நாள் காத்திருப்பிற்கு பிறகு விக்ரமை வெளியிட்டார். விஜய் சேதுபதி, பகத் ஃபாஸில் என பிரபலங்கள் உலகநாயகனுடன் தோன்றி இருந்தனர். படம் முந்தைய கமலின் விக்ரம் படத்தின் தொடர்ச்சி என்று சொன்ன போதிலும் வேற லெவல் காட்சியமைப்புகளுடன் கலக்கி இருந்தது. இதன் கிளைமேக்சில் சூர்யா ரோலக்ஸ் வேடத்தில் சொல்லி அடித்திருந்தார். இந்த ரோல் குறித்து சூர்யாவிற்கு பாராட்டுக்கள் குவிந்தன.
மேலும் செய்திகளுக்கு... 47 years of Rajinism : ரஜினிவீட்டில் திடீர் கொண்டாட்டம் .. வைரலாகும் சௌந்தர்யா ரஜினிகாந்தின் பதிவு
அதிலும் படம் 400 கோடிகளுக்கு மேல் வசூலித்து கமலின் ஆல்ரவுண்டர் படமாக மாறியது. அதோடு உலகளவில் 300 கோடி பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்சன் பெற்ற நடிகர்களின் பட்டியலில் உலக நாயகனை சேர்த்தது விக்ரம். பின்னர் வெற்றி படத்தை கொடுத்த இயக்குனர் மற்றும் துணை இயக்குனர், சூர்யா உள்ளிட்டோருக்கு பரிசுகள் கொடுத்து மகிழ்ந்தார் கமல்.
Lokesh Kanagaraj
விக்ரம் படத்தை அடுத்து பல படங்களில் கமிட்டாகி விட்டார் லோகேஷ். அதோடு இவர் இயக்கத்தின் மீது ரசிகர்களுக்கு ஒரு பிடித்தம் ஏற்பட்டு விட்டது. எர்க்சினவே மீண்டும் விஜயுடன், சூப்பர் ஸ்டாருடன், கைதி 2, விக்ரம் 2 என அடுத்தடுத்த படங்களை தன கையில் வைத்துள்ள லோகேஷ்...ஏற்கனவே சூர்யாவுடன் ஒரு படத்தை ஓகே செய்து வைத்துள்ளார். ஏற்கனவே இதற்கு இருப்பு கை மாயாவி என பெயர் வைக்கப்பட்டு விட்டது. பல ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த படத்தின் தகவல் விக்ரமுக்கு பிறகு மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
irumbu kai mayavi
இந்நிலையில் சூர்யாவுடனான கூட்டணி குறித்து பேசியிருந்த லோகேஷ் கனகராஜ், ப்ரீ புரொடக்ஷன் பணிகள் 8 மாதங்களாக விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சூர்யாவும் இந்த திட்டத்தில் ஆர்வமாக இருப்பதால், அடிக்கடி படம் குறித்து கேட்டு வருவதாகவும் கூறியுள்ளார். இவரின் பேட்டி இரும்பு கை மாயாவி குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகலாம் என்கிற உறுதியை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது.
இந்த 'இரும்பு கை மாயாவி' காமிக் நாவலான 'தி ஸ்டீல் கிளா'வின் தழுவலாகவும். கதாநாயகன் ஒரு விபத்தில் ஒரு கையை இழக்கிறான், பின்னர் உலோகக் கையால் குற்றங்களை எதிர்த்துப் போராடுகிறான் என்று படத்தின் கதை குறித்து ஏற்கனவே குறிப்புகள் வெளியாகி விட்டது..