சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது பதிவில் தந்தை மற்றும் தாய் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து, 'எங்கள் அன்பான ஜில்லுமா அப்பாவின் மிகப்பெரிய ரசிகரும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுள்ளார்.

இந்தியாவின் 75வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்துடன் சேர்த்து ரஜினி தனது 47 ஆண்டுகளை நிறைவு செய்ததையும் கொண்டாடினார். இவ்விரு சந்தர்ப்பங்களையும் சிறப்பாக நினைவு கூர்ந்த சூப்பர் ஸ்டாருடன் அவரது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்ஸ்டாகிராமில் சில படங்களை பகிர்ந்திருந்தார். அதில் சுதந்திரத்தின் வணக்கங்கள் தியாகங்கள், போராட்டங்கள் மற்றும் வலிமை அவருக்கு பிறந்த பெருமை மகள் என குறிப்பிட்டிருந்தார். அவர்களுக்கு பின்னால் ரஜினியின் படத்துடன் 47 வருட ரஜினிசம் என்று எழுதப்பட்டிருந்தது. 

Scroll to load tweet…

முன்னதாக சுதந்திர தின விழாவை முன்னிட்டு அந்நாளில் முக்கியத்துவம் குறித்த ரஜினிகாந்த் ட்விட்டரில் ஒரு குறிப்பு எழுதி இருந்தார். அதில், இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆவது ஆண்டு நமது தாய்நாடு மரியாதையின் அடையாளமாகவும் நமது ஒற்றுமையின் வெளிப்பாடாகவும் சொல்லலாம். போராட்டங்கள் மற்றும் துயரங்களை அனுபவித்த லட்சக்கணக்கான மக்களுக்கும், வேதனையும், அவமானமும் இந்த சுதந்திரத்திற்காக தன்னலம் இன்றி உயிர் தியாகம் செய்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும், சுதந்திரப் போராட்ட தியாகிகள் அனைவருக்கும் ஜாதி மதம் அரசியலுக்கு அப்பாற்பட்டு அவர்களைப் நன்றியுடன் வணங்குவோம்.

நமது அடுத்த தலைமுறை குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கு நமது இந்திய தேசிய கொடி திறமையுடன் நமது வீடுகள் அலுவலகங்கள் மற்றும் பணியிடங்களுக்கு வெளியே காட்டப்படும். மகத்தான இந்தியா 75வது சுதந்திர தினத்தில் பெருமையுடன் கொண்டாடுவோம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தும் விதமாக நம் தேசியக்கொடி எங்கும்பறக்கட்டும் ஜெய்ஹிந்த். என டிவிட்டரில் நீண்ட பதிவு எழுதியிருந்தார்.

Scroll to load tweet…

இந்நிலையில் அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது பதிவில் தந்தை மற்றும் தாய் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்து, 'எங்கள் அன்பான ஜில்லுமா அப்பாவின் மிகப்பெரிய ரசிகரும் எங்கள் குடும்பத்தின் சூப்பர் ஸ்டார் என பதிவிட்டுள்ளார். அந்தப்படத்தில் லதா ரஜினிகாந்த் பூங்காத்தை ரஜினியிடம் கொடுத்து வாழ்த்து தெரிவிக்கிறார். அவர்களது முன்பாக மேஜையில் இனிப்புகளும் கேக்குகளும் இடம் பெற்றுள்ளது..

Scroll to load tweet…

தற்போது சூப்பர் ஸ்டார் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடிக்க உள்ளார். அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அனிருத் இசையமைக்க விஜய் கார்த்திக் கண்ணன் ஒலி பதிவு செய்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக ரஜினிகாந்தின் அண்ணாத்த படம் வெளியாகி கலமையான விமர்சனங்களை பெற்றிருந்தது.